Thirukural

54. பொச்சாவாமை

531

இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

532

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

533

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்துஎப்பால்நூ லோர்க்கும் துணிவு.

534

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லைபொச்சாப் புடையார்க்கு நன்கு.

535

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழைபின்னூறு இரங்கி விடும்.

536

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமைவாயின் அதுவொப்பது இல்.

537

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்கருவியால் போற்றிச் செயின்.

538

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாதுஇகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

539

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

540

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்உள்ளியது உள்ளப் பெறின்.