|
வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
முன்னுறக் காவாது இழுக்கியான் - தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் ஊறு தன்பிழை இரங்கிவிடும் - பின்வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும். (காக்கப்படும் துன்பங்களாவன: சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. 'ஊற்றின்கண்' என்புழி உருவும் சாரியையும் உடன் தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், இரங்கிவிடும் என்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தன்னாற் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் வந்துற்றகாலத்துக் காக்கலாகாமையின் அப்பிழைப்பினை நினைந்திரங்கிவிடும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
முன் உறக்காவாது இழுக்கியான் - தன்னால் தடுக்கப்படவேண்டிய துன்பங்களை அவை வருமுன்பே யறிந்து தன்னைக்காவாது மறந்திருந்தவன் ; பின் ஊறு தன் பிழை இரங்கி விடும் - பின்பு அவை நேர்ந்த பொழுது தடுக்க லாகாமையின் தன்தவற்றையெண்ணி வருந்தியழிவான்.
காக்கவேண்டிய துன்பங்கள் ; பகைவர் சோர்வு பார்த்துச் செய்வனவும் பஞ்சம் வெள்ளம் முதலியனவுமாம் . ஊற்றின்கண் என்பது உருபுஞ் சாரியையும் உடன்தொக்கு நின்றது . விடுதல் நீங்குதல்; இங்கு அழிதல்.
|
|
கலைஞர் உரை:
|
|
முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன்,
துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏனென்றால்) இன்ப காலத்தில் தன் கடமைகளை மறக்கிறவன் பின்னால் வரக்கூடிய துன்பங்களை உணர்ந்து முன்னெச்சரிக்கை செய்ய முடியாத குற்றமுடையவன். அக் குற்றத்தால் பின்னால் துன்பங்கள் வந்தே தீரும். அதனால் அவன் நொந்தே போவான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
வருகின்ற துன்பங்களை முன்னதாகவே அறிந்து காத்துக் கொள்ளாமல் மறந்திருந்தவன், பின்னர் தனது பிழையினை நினைத்து இரங்கிக் கவலைப்படுவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
துன்பம், ஒன்று ஏற்படுதற்கு முன்னரே அறிந்து அதைக் காத்துக் கொள்ளத் தவறியவன் துன்பம் ஒன்று உற்றபின் அதற்காக பெரிதும் வருந்துமாறு ஆகி விடும்.
|
|
Translation
|
|
To him who nought foresees, recks not of anything,
The after woe shall sure repentance bring.
|
|
Explanation
|
|
The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.
|
|
Transliteration
|
|
Munnurak Kaavaadhu Izhukkiyaan Thanpizhai
Pinnooru Irangi Vitum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|