Thirukural

49. காலமறிதல்

481

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

482

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்தீராமை ஆர்க்குங் கயிறு.

483

அருவினை யென்ப உளவோ கருவியான்கால மறிந்து செயின்.

484

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்கருதி இடத்தாற் செயின்.

485

காலம் கருதி இருப்பர் கலங்காதுஞாலம் கருது பவர்.

486

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்து.

487

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

488

செறுநரைக் காணின் சுமக்க இறுவரைகாணின் கிழக்காம் தலை.

489

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல்.

490

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து.