|
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஞாலம் கருதினும் கைகூடும் - ஒருவன் ஞாலம் முழுவதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது அவன் கையகத்ததாம், காலம் கருதி இடத்தான் செயின் - அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின். ('இடத்தான்' என்பதற்கு மேல் 'கருவியான்' என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க, கைகூடாதனவும் கைகூடும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் காலம் அறிதற் பயன் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உலகமெல்லாம் பெறுதற்கு நினைத்தானாயினும் பெறலாம்: காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வனாயின்.
இஃது எல்லாப் பொருளையு மெய்துமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஞாலம் கருதினும் கைகூடும் - ஒருவன் உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும் ; காலம் கருதி இடத்தான் செயின் - அதற்குரிய வினையை அவன் தகுந்த கால மறிந்து இடத்தொடு பொருந்தச் செய்வானாயின் .
வினை பெரிதாதலின் இடமும் வேண்டியதாயிற்று . உம்மை உயர்வு சிறப்பு .
|
|
கலைஞர் உரை:
|
|
உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால்
உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
காலங் கருதிக் காத்திருந்து, வாய்ப்பான காலம் வந்தவுடன் காரியத்தைச் செய்தால் உலகம் முழுவதையும் வசப்படுத்த விரும்பினாலும் முடியும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
காலத்தினைக் கருதிக் தக்க இடத்தோடு பொருந்த அதற்குச் செய்யவேண்டிய செயல்களைச் செய்வாராயின், உலகு முழுவதையும் ஒருவன் ஆள நினைத்தாலும் அது முடியும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உரிய காலம் அறிந்து இடமும் அறிந்து ஏற்றவண்ணம் ஒருவன் செயல்படுவானாயின்,உலகையே பெறநினைப்பினும் அது கைகூடும்.
|
|
Translation
|
|
The pendant world's dominion may be won,
In fitting time and place by action done.
|
|
Explanation
|
|
Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place.
|
|
Transliteration
|
|
Gnaalam Karudhinung Kaikootung Kaalam
Karudhi Itaththaar Seyin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|