131. புலவி
1301
புல்லா திராஅப் புலத்தை அவருறும்அல்லல்நோய் காண்கம் சிறிது
1302
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிதுமிக்கற்றால் நீள விடல்
1303
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்புலந்தாரைப் புல்லா விடல்
1304
ஊடி யவரை உணராமை வாடியவள்ளி முதலரிந் தற்று
1305
நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகைபூவன்ன கண்ணார் அகத்து
1306
துனியும் புலவியும் இல்லாயின் காமம்கனியும் கருக்காயும் அற்று
1307
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வதுநீடுவ தன்றுகொல் என்று
1308
நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்காதலர் இல்லா வழி
1309
நீரும் நிழல தினிதே புலவியும்வீழுநர் கண்ணே இனிது
1310
ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்கூடுவேம் என்ப தவா