|
ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) ஊடியவரை உணராமை - நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடலுணர்த்திக் கூடாதொழிதல்; வாடிய வள்ளி முதல் அரிந்தற்று - பண்டே நீர் பெறாது வாடிய கொடியை அடியிலே அறுத்தாற் போலும். ('நீர் பரத்தையரிடத்தில் ஆயவழி எம் புதல்வரைக் கண்டு ஆற்றியிருக்கற்பாலமாய யாம் நும்மோடு ஊடுதற்குரியமல்லம் அன்மையின், எம்மை உணர்த்தல் வேண்டா; உரியராய் ஊடிய பரத்தையரையே உணர்த்தல் வேண்டுவது; அதனால் ஆண்டுச் சென்மின்', என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நும்மோடு ஊடிக்கண்டும் இவையிற்றால் வரும் பயன் இல்லை: நின்னோடு நெருநல் ஊடிய காமக்கிழத்தியரை ஊடல் தீராது பெயர்தல், வாடிய கொடியை அடியிலே அறுத்தாற்போலும்.
இது காமக்கிழத்தியரை ஊடல் தீராமை தீது; ஆண்டுப் போமேன்ற தலைமகள் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஊடியவரை உணராமை-நும்மொ டூடிய பரத்தை யரை ஊடல் தீர்த்துக் கூடாது விடுதல் ; வாடிய வள்ளி முதல் அரிந்த அற்று - முன்பே நீர் பெறாது வாடிய கொடியை அடியில் அறுத்துவிட்டாற் போலும் .
நீர் பரத்தையரோ டிருக்குங்கால் எம் புதல்வரைக் கொண்டாற்றியிருக்கத் தக்கேமாகிய யாம் , நும்மோ டூடுதற் குரியே மல்லேம் . ஆதலால் எம்மை யுணர்த்தல் வேண்டேம் . எம்மினும் நுமக்குரியாரா யூடிய பரத்தையரையே யுணர்த்துதல் வேண்டும் . ஆதலால் அங்கேயே சென்மின் என்பதாம் .
|
|
கலைஞர் உரை:
|
|
ஊடல்புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே
இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில்
அறுப்பது போன்றதாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பிணங்கியிருக்கும் என் பிணக்கத்தைத் தீர்த்து என் காதலர் என்னைப் புணராமல் இருந்துவிட்டால் அது நீரில்லாமல் ஏற்கனவே வாடிப்போயிருக்கிற ஒரு பூங்கொடியை வேரறுத்த மாதிரியாகும். (நான் இறந்தே போவேன்).
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தம்முடன் ஊடிய மகளிரை ஊடல் நீக்கிக் கூடாதிருத்தல் முன்னமேயே நீரின்றி வாடிய கொடியை அடியிலே அறுத்தது போன்றதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஊடல் கொண்டவரின் ஊடலைப் போக்கி அவரோடு சேராமல் நீங்குவது வாடி நிற்கும் வள்ளிக்கொடியை அடியோடு வெட்டிவிடுதல் போலாகும்.
|
|
Translation
|
|
To use no kind conciliating art when lover grieves,
Is cutting out the root of tender winding plant that droops
|
|
Explanation
|
|
Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root
|
|
Transliteration
|
|
Ooti Yavarai Unaraamai Vaatiya
Valli Mudhalarin Thatru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|