Thirukural

42. கேள்வி

411

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்து ளெல்லாந் தலை.

412

செவுக்குண வில்லாத போழ்து சிறிதுவயிற்றுக்கும் ஈயப் படும்.

413

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

414

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குஒற்கத்தின் ஊற்றாந் துணை.

415

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

416

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்ஆன்ற பெருமை தரும்.

417

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்தீண்டிய கேள்வி யவர்.

418

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்தோட்கப் படாத செவி.

419

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கியவாயின ராதல் அரிது.

420

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்அவியினும் வாழினும் என்.