|
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் - ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான். ( செவியான் வரும் செல்வம் - கேள்வியால் எல்லாப் பொருளையும் அறிதல். பிற செல்வங்கள் - பொருளால் வருவன. அவை நிலையா ஆகலானும், துன்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று. அவற்றை ஒழித்து இதனையே செய்க என்பது குறிப்பெச்சம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவற்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வருஞ் செல்வம்: அச்செல்வம் பிறசெல்வங்க ளெல்லாவற்றினும் தலையாகலான்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்-ஒருவனுக்குச் சிறந்த செல்வமானது கேள்வியறிவாகிய செல்வம்; அச் செல்வம் செல்வத்துள் எல்லாம்தலை-அச்செல்வம் எல்லாச் செல்வங்களுள்ளும் தலைமையான தாகலான்.
செல்வங்கள் இருவகையும் மூவகையும் எண்வகையுமாகச் சொல்லப்படுவன. கல்வியுங் கேள்வியொடு தொடர்புடையதாய் அதனுளடங்குதலின், 'செல்வத்து ளெல்லாந்தலை' என்றார். 'கேடில் விழுச்செல்வம்' கல்வியென்பதும், 'மாடல்ல மற்றையவை' என்பதும் முன்னரே கூறப்பட்டன.
|
|
கலைஞர் உரை:
|
|
செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச்
செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(மக்கள் விரும்பியடைகின்ற) செல்வங்களிற் சிறந்த செல்வம் கேள்வி இன்பம். அந்த இன்பம் மற்றச் செல்வ இன்பங்களுக்கெல்லாம் சிறந்தது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவர்க்குச் சிறப்புடைய செல்வமானது செவியால் வரும் செல்வமாகும். அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றையும் விடத் தலையாய செல்வமாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
செல்வத்துள் எல்லாம் செல்வமாகப் போற்றப்படுவது செவிகளின் கேள்வி ஞானமே. அச்செல்வம் அனைத்துச் செல்வங்களிலும் சிறந்ததாகக் கருதப்படும்.
|
|
Translation
|
|
Wealth of wealth is wealth acquired be ear attent;
Wealth mid all wealth supremely excellent.
|
|
Explanation
|
|
Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.
|
|
Transliteration
|
|
Selvaththut Selvanj Chevichchelvam Achchelvam
Selvaththu Lellaan Thalai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|