Thirukural

133. ஊடலுவகை

1321

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்வல்லது அவர்அளிக்கு மாறு.

1322

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளிவாடினும் பாடு பெறும்.

1323

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடுநீரியைந் தன்னார் அகத்து.

1324

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்உள்ளம் உடைக்கும் படை.

1325

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்அகறலின் ஆங்கொன் றுடைத்து.

1326

உணலினும் உண்டது அறல்இனிது காமம்புணர்தலின் ஊடல் இனிது.

1327

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்கூடலிற் காணப் படும்.

1328

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்கூடலில் தோன்றிய உப்பு.

1329

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்பநீடுக மன்னோ இரா.

1330

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்கூடி முயங்கப் பெறின்.