Thirukural

32. இன்னாசெய்யாமை

311

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னாசெய்யாமை மாசற்றார் கோள்.

312

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.

313

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும்.

314

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.

315

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தந்நோய்போல் போற்றாக் கடை.

316

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமைவேண்டும் பிறன்கண் செயல்.

317

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்மாணாசெய் யாமை தலை.

318

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோமன்னுயிர்க்கு இன்னா செயல்.

319

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னாபிற்பகல் தாமே வரும்.

320

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர்.