|
எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மனத்தான் ஆம் மாணா - மனத்தோடு உளவாகினற் இன்னாத செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை - எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும் செய்யாமை தலையாய அறம். (ஈண்டு மனத்தான் ஆகாத வழிப் பாவம் இல்லை என்பது பெற்றாம். ஆற்றலுண்டாய காலத்தும் ஆகாமையின். 'எஞ்ஞான்றும்' என்றும் எளியார்க்கும் ஆகாமையின் , 'யார்க்கும்' என்றும், செயல் சிறிதாயினும் பாவம் பெரிதாகலின், 'எனைத்தானும்' என்றும் கூறினார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
யாதொன்றாயினும், எல்லா நாளும் யாவர்மாட்டும் இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மனத்தான் ஆம் மாணா- மனத்தோடு கூடிய தீய செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை- எக்காலத்தும் எவர்க்கும் எத்துணைச் சிறிதும் செய்யா திருத்தல் தலைமையான அறமாம்.
மனத்தோடு கூடிய செயலாவது அறிந்து செய்யுஞ் செயல். மாணுதல் நன்றாதல். 'மாணா' பலவின் பால் எதிர்மறை விணையாலணையும் பெயர். வலிமையுள்ள காலத்தையும் உட்படுத்த 'எஞ்ஞான்றும்' என்றும் எளியாரையும் விலக்க 'யார்க்கும்' என்றும் "சிறு பொறி பெருந்தீ" யாதலானும் சிறுநஞ்சும் பெருந்தீங்கு செய்தலானும் சிறுவினையும் தீயது தீவினையே என்று கருதி எனைத்தானும் என்றும் கூறினார்.
|
|
கலைஞர் உரை:
|
|
எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை
மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(தீமை உண்டாக்கக் கூடிய செயல்களை மட்டுமல்ல;) எவ்வளவு சிறிய அளவிலுங்கூட, எப்போதும், யாருக்கும் கண்ணிய மில்லாதது என்று தன் மனத்திற்படுகிற எதையும் செய்யாமலிருப்பது மிகச் சிறந்த குணம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மனத்தோடு பொருந்திய துன்பம் தரும் செயல்களை எக்காலத்திலும், யார்க்கும் சிறிதேயாயினும் செய்யாதிருத்தல் தலையான அறமாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
எத்துணையும், எம்பொழுதும், யார்க்கும் மனத்தளவில் கூட துன்பம் தருவனவற்றை நினையாதிருத்தலேதலையாய அறம்
|
|
Translation
|
|
To work no wilful woe, in any wise, through all the days,
To any living soul, is virtue's highest praise.
|
|
Explanation
|
|
It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time.
|
|
Transliteration
|
|
Enaiththaanum Egngnaandrum Yaarkkum Manaththaanaam
Maanaasey Yaamai Thalai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|