|
தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் - தான் முன்பு ஓர் இன்னாமை செய்யாதிருக்கத் தன்மேல் செற்றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின்; உய்யா விழுமம் தரும் - அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத இடும்பையைக் கொடுக்கும். (அவ்விடும்பையாவது தவம் இழந்து பழியும் பாவமும் எய்துதல்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தானொரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத வற்றைச் செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின் அஃது உய்வில்லாத நோயைத்தரும்.
இது காரணமின்றி இன்னாதன செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிரவேண்டுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்- தான் ஒரு தீங்கும் செய்யாதிருக்கவும் தன்மேற் பகைமைகொண்டு தீங்கு செய்தவர்க்கும் துறவுபூண்டவன் தீயவற்றைச் செய்வானாயின்; உய்யா விழுமம் தரும்- அச்செயல் அவனுக்குத் தப்ப முடியாத துன்பத்தைத்தரும்.
துன்பமாவது தவமிழத்தலும் கரிசு(பாவம்) அடைதலும். துறவறத்தில் தீமைக்குத் தீமை செய்தலும் தீவினையாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு
செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம்
தரக் கூடியதாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(தீங்கு செய்தவர்களுக்கும் திருப்பித் தீங்கு செய்யா திருப்பதே விரும்ப வேண்டியதாயிருக்க, ஒரு தீங்கும் செய்யா தவர்களுக்கும் தீங்கு செய்கிறார்களே!) பகைவர்களுக்கானாலும், அவர்கள் ஒரு தீங்கும் செய்யாதிருக்கும்போது அவர்களுக்குத் தீங்கு செய்தால், அது தப்பித்துக் கொள்ள முடியாத குற்றமுண்டாக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தான் முன்பு ஒரு தீமையும் செய்யாதிருக்கத் தன்மேல் கோபம் கொண்டவர்க்குத் துன்பத்தினை முனிவன் செய்வானானால் அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத துன்பத்தினைத் தரும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தான் ஏதும் தீமை செய்யாதபோதிலும், தனக்குத் தீமை செய்தார்க்குத் தீங்கிழைக்க முற்படின் அது பெருந்துன்பத்தைத் தரும்.
|
|
Translation
|
|
Though unprovoked thy soul malicious foes should sting,
Retaliation wrought inevitable woes will bring.
|
|
Explanation
|
|
In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow.
|
|
Transliteration
|
|
Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin
Uyyaa Vizhuman Tharum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|