|
ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் - தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும். மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - மீண்டுதாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு. (இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும் தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு,
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும்- ஒருவன் தம்மேற் கறுவுகொண்டு தீயவற்றைச் செய்தவிடத்தும்; மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள்- திருப்பித்தாம் அவனுக்குத் தீயவை செய்யாமையும் குற்றமற்ற பெரியோர் கொள்கையாம்.
இறந்தது தழுவிய எச்சவும்மை தொக்கது. இதனாற் பழிக்குப் பழி செய்யும் பகைமை பற்றி இன்னா செய்தல் விலக்கப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது
அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே
சிறந்த மனிதரின் கொள்கையாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதை விடவும்) கோபத்தால் ஒரு தீங்கு செய்துவிட்ட வருக்கும் திருப்பித் தீங்கு செய்யாதிருப்பது குற்றமற்றவர்களுடைய கொள்கை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தம்மேல் கோபம் கொண்டு ஒருவன் துன்பம் தருபவற்றைச் செய்தான் என்றாலும் மீண்டும் தாம் அவனுக்குத் துன்பம் செய்யாமை மாசற்ற தவசிகளின் துணிவாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவர் பகைஉணர்வோடு பெருந்துன்பம் இழைத்தாலும் பதிலுக்குப்பதில் என்கிற வகையில் அவருக்குத் துன்பம் செய்யாமல் இருப்பதே குற்றமிலா பெரியோர் கொள்கை.
|
|
Translation
|
|
Though malice work its worst, planning no ill return, to endure,
And work no ill, is fixed decree of men in spirit pure.
|
|
Explanation
|
|
It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.
|
|
Transliteration
|
|
Karuththuinnaa Seydhavak Kannum Maruththinnaa
Seyyaamai Maasatraar Kol
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|