Thirukural

10. இனியவைகூறல்

91

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

92

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின்.

93

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம்.

94

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

95

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற.

96

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின்.

97

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல்.

98

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும்.

99

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்கு வது.

100

இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.