|
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இன்சொல் - இன்சொலாவன; ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் - அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள். (ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இன்சொல்-இனிய சொல்லாவன; ஈரம் அளைஇ-அன்பு கலந்து; படிறு இலவாம்-வஞ்சனை யில்லாத; செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்-மெய்ப் பொருளையறிந்த சான்றோர் வாய்ச் சொற்கள்.
'ஆல்' அசைநிலை. படிறு-பொய். எப்பாலவரும் இயையும் உண்மைப்பொருள் என்றும் மாறாது நேராயிருத்தலின் 'செம்பொருள்' என்றார். 'செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்' என்றது, அவர் வாயினின்று வருஞ்சொற்களெல்லாம் என்றும் இனியனவே என்பதை உணர்த்தற்கு; 'அளைஇ' சொல்லிசை யளபெடை.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும்,
வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே
இன்சொல் எனப்படும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
இல்வாழ்க்கையின் பயன்களைச் செம்மையாக அறிந்தவர் களுடைய வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் இனிமையாகவும் அன்பு கலந்தனவாகவும் வஞ்சக நோக்கம் இல்லாதனவாகவும் இருக்கும். இதுதான் இனியவை கூறல்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அறத்தினை அறிந்தவர்கள், வஞ்சனையிலாதவைகளாகி அன்போடு கலந்து சொல்லுகின்ற சொற்கள், இன்சொற்கள் எனப்படுவதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நன்னெறி தேர்ந்தவர்களின் சொற்கள் இனிமையாய் ஈரம் நிறைந்ததாய் குற்றம் அற்றதாய் அமையும்.
|
|
Translation
|
|
Pleasant words are words with all pervading love that burn;
Words from his guileless mouth who can the very truth discern.
|
|
Explanation
|
|
Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.
|
|
Transliteration
|
|
Insolaal Eeram Alaiip Patiruilavaam
Semporul Kantaarvaaich Chol
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|