Thirukural

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல்.

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நயன் ஈன்று நன்றி பயக்கும் - ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்: பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல். (நீதி: உலகத்தோடு பொருந்துதல். 'பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் - ஒரு சொல் நீர்மைத்து.)
மணக்குடவர் உரை:
பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து, அறத்தினையும் பயக்கும்; குணத்தினின்று நீங்காத சொல்.
தேவநேயப் பாவாணர் உரை:
பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - விளைவாற் பிறர்க்கு நன்மை செய்து இனிமைப் பண்பினின்றும் நீங்காத சொல் ; நயன் ஈன்று நன்றி பயக்கும் - இம்மைக்கு நேர்ப்பாட்டை ( நீதியை ) உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் விளைவிக்கும் . நேர்பாடு என்பது நீதி என்னும் வடசொற்கு நேர்த்தென்சொல் . நேர்மை என்பது நேர்பாட்டையுங் குறிக்கும் பல பொருளொரு சொல் . நேர்பாடு நேர்மையான ஒழுக்கம் . " கோணே நேர்பாடாயிருந்தான் " ( பாரத . சூது .227 ) . ' பண்பு ' என்பது இங்கு அதிகாரத்தால் இனிமைப் பண்பைக் குறித்தது . தலைப்பிரிதல் என்பது தலைக்கூடுதல் என்பதற்கு எதிர் .
கலைஞர் உரை:
நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(நல்ல எண்ணம் என்பது பிறருக்கு நன்மை வர எண்ணுவது). பிறருக்கு நன்மை உண்டாகும்படி சொல்லுவதன் பண்பு கெடாதபடி இனிய வார்த்தைகள், பேசுகின்றவனுக்கு அருள் குணத்தை உண்டாக்கிப் பல நன்மைகளைச் செய்யும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நற்பயனைக் கொடுத்து இனிமையான நற்பண்பிலிருந்து நீங்காத இன்சொற்கள் நீதியினையும் அறத்தினையும் கொடுக்கும்.
தமிழ்க்குழவி உரை:
நற்பயன் விளைவிப்பதாய் அமையும் பண்பார்ந்த இனிய சொற்கள் ஒருவர்க்கு நற்பலன்களையும் நன்மைகளையும் தரும்.
Translation
The words of sterling sense, to rule of right that strict adhere, To virtuous action prompting, blessings yield in every sphere.
Explanation
That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world).
Transliteration
Nayan Eendru Nandri Payakkum Payaneendru Panpin Thalaippiriyaach Chol

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 97