Thirukural

90. பெரியாரைப் பிழையாமை

891

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்போற்றலுள் எல்லாம் தலை.

892

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்பேரா இடும்பை தரும்.

893

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்ஆற்று பவர்கண் இழுக்கு.

894

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்குஆற்றாதார் இன்னா செயல்.

895

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்வேந்து செறப்பட் டவர்.

896

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

897

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.

898

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடுநின்றன்னார் மாய்வர் நிலத்து.

899

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும்.

900

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்சிறந்தமைந்த சீரார் செறின்.