Thirukural

125. நெஞ்சொடுகிளத்தல்

1241

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

1242

காதல் அவரிலர் ஆகநீ நோவதுபேதைமை வாழியென் நெஞ்சு.

1243

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்பைதல்நோய் செய்தார்கண் இல்.

1244

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்தின்னும் அவர்க்காணல் உற்று.

1245

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்உற்றால் உறாஅ தவர்.

1246

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

1247

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சேயானோ பொறேன்இவ் விரண்டு.

1248

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

1249

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீயாருழைச் சேறியென் நெஞ்சு.

1250

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமாஇன்னும் இழத்தும் கவின்.