|
நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(அவரை மறந்து ஆற்றல் வேண்டும் என்பதுபடச் சொல்லியது.) துன்னாத துறந்தாரை நெஞ்சத்து உடையேமா - நம்மைக் கூடாவண்ணம் துறந்துபோயினாரை நாம் அகத்து உடையேமாக; இன்னும் கவின் இழத்தும் - முன் இழந்த புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும் இழப்பேம். ('குன்றின், நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்' (குறுந்.கடவுள்வாழ்த்து) என்புழிப்போல் 'நெஞ்சு' என்பது ஈண்டும் அகப் பொருட்டாய் நின்றது. 'அவர் நம்மைத் துன்னாமல் துறந்தார் ஆகவும். நாம் அவரை மறத்தல் மாட்டேமாகவும், போன பொய்க்கவினே அன்றி நின்ற நிறையும் இழப்பேம்' என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மனமே! நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின் முன்னும் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம்; ஆதலான் மறத்தலே கருமம். ஈண்டு நெஞ்சென்றது மனத்துடைய தானத்தை. இது நினைக்கின்றதனால் பயனில்லை யென்று கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(அவரை மறந்தாற்றல் வேண்டுமென்பது படச் சொல்லியது.) துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா- எம்மைக் கூடாவண்ணம் பிரிந்து போனவரை எம் உள்ளத்து உடையேமாக; இன்னும் கவின் இழத்தும் - முன்னிழந்த புறவழகேயன்றி எஞ்சி நின்ற அகவழகும் இழப்பேம். அவர் நம்மைக் கூடாவாறு பிரிந்து போனமையாலும், நாம் அவரை மறக்க முடியாமையாலும், போன மேனியழகேயன்றி நின்ற நிறையும் இழப்பேம். ஆதலால், அவரை மறந்தாற்றுதலே நன்றென்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(நம் மனத்திலிருக்கிற இவர் போதும்; நம்மை விட்டுப் போயிருக்கிற அவரை நினைக்க வேண்டா.) நம் அருகில் இருக்காமல் நீங்கியிருக்கிற அவரை மனத்தில் வைத்துக்கொண்டே ஏங்கியிருந்தால் உறுப்பு நலமெல்லாம் கெட்டதோடு, உடல் நலமும் இன்னும் கெட்டுப் போகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நம்மைக் கூடாவண்ணம் விட்டுப்போன தலைவரை, நாம் நம் மனத்திலேயே வைத்திருப்பதால் முன்பு இழந்த புறத்து அழயேயன்றி மனத்து அழகினையும் இழப்போம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
என்னோடு சேராமல் என்னை விட்டுப் பிரிந்தாரை, என் நெஞ்சுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பதால் இன்னும் இன்னும் என் அழகு தான் கெடுகிறது.
|
|
Translation
|
|
If I should keep in mind the man who utterly renounces me,
My soul must suffer further loss of dignity.
|
|
Explanation
|
|
If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains.
|
|
Transliteration
|
|
Thunnaath Thurandhaarai Nenjaththu Utaiyemaa
Innum Izhaththum Kavin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|