|
மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மனம் மாணா உட்பகை தோன்றின் - புறம் திருந்தியது போன்று அகந்திருந்தாத உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இனம் மாணா ஏதம் பலவும் தரும் -அஃது அவனுக்குச் சுற்றம் வயமாகாமைக்கு ஏதுவாகிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும். (அவை, சுற்றத்தாரை உள்ளாய் நின்று வேறுபடுத்தலும், அதனால் அவர் வேறுபட்டவழித் தான் தேறாமையும், பின் அவற்றான் விளைவனவும் ஆம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மனம் நன்றாகாத உட்பகை தோன்றுமாயின் தனக்கு இனமாயினார் நல்லராகார்; அஃதன்றிப் பல குற்றங்களும் உண்டாம். இஃது இனம் பொருந்தாமல் கூடநின்று பகைப்பிக்கு மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மனம் மாணா உட்பகை தோன்றின் - புறத்தில் திருந்தியதுபோல் தோன்றி அகத்தில் திருந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமாயின்; இனம்மாணா ஏதம் பலவும் தரும் - அது அவனுக்குச் சுற்றம் துணையாகாமைக் கேதுவாகிய பல குற்றத்தையும் உண்டுபண்ணும். 'இன மாணா ஏதம்' சுற்றத்தாரை உள்ளாக நின்று வேறுபடுத்தலும் அவர்வேறு படுதலும் அதனால் அவர்துணை இல்லாமற்போதலுமாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
மனம் பொருந்தாததனால் உடனிருப்பவன் உட்பகை கொண்டுவிட்டாலும், அது தனக்குத் துணைப்பலம் குறைந்து போகும்படியான பல துன்பங்களையும் உண்டாக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
புறத்தில் திருந்தியதுபோல இருந்து உள்ளுக் குள்ளே திருந்தாத உட்பகை உண்டாகிவிட்டால் அது அவனுக்குத் தனது சுற்றத்தார் தனது வசப்படாமைக்குக் காரணமான குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உள்ளம் பண்படாதவர்களின் உட்பகை ஒருவர்க்குத் தோன்றுமாயின் சார்ந்தவர்களுக்கெல்லாம் அது பெரும் துயரைத் தரும்.
|
|
Translation
|
|
If secret enmities arise that minds pervert,
Then even kin unkind will work thee grievous hurt.
|
|
Explanation
|
|
The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relations
|
|
Transliteration
|
|
Manamaanaa Utpakai Thondrin Inamaanaa
Edham Palavum Tharum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|