|
செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வகை அறிந்து தற் செய்து தற் காப்ப - தான் வினை செய்யும் வகையை அறிந்து அது முடித்தற்கு ஏற்பத் தன்னைப் பெருக்கி மறவி புகாமல் தன்னைக் காக்கவே; பகைவர்கண் பட்ட செருக்கு மாயும் - தன் பகைவர் மாட்டு உளதாய களிப்புக் கெடும். (வகை - வலியனாய்த் தான் எதிரே பொருமாறும், மெலியனாய் அளவில் போர் விலக்குமாறும் முதலாயின. பெருக்கல் - பொருள் படைகளாற் பெருகச் செய்தல். களிப்பு - 'இவற்றான் வேறும்' என்று எண்ணி மகிழ்ந்திருத்தல். இவ்விறுகுதல் அறிந்து தாமே அடங்குவர் என்பதாம். இதனால் களைதற்பால தன்கண் செய்வன கூறப்பட்டன.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
வினைசெய்யும் வகையை யறிந்து, தன்னைப் பெருக்கித் தான் தன்னைக் காக்கப் பகைவர்மாட்டு உண்டான பெருமிதம் கெடும். இது பகைவரைக் கொல்லுந் திறங் கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வகை அறிந்து தற்செய்து தற்காப்ப-வினை செய்யும் வகையறிந்து அதற்கேற்பத் தன்னை வலிமைப் படுத்தித் தற்காப்புஞ் செய்துகொள்ளின் ; பகைவர்கண் பட்ட செருக்கு மாயும் - பகைவரிடத்துள்ள இறுமாப்புத்தானே நீங்கிவிடும். வினைசெய்யும் வகைகள் நால்வகை ஆம்புடைகளும் , பிரித்தல் பொருத்தல் பேணல் முதலிய வலக்காரங்களும் , காலவிட வலி களறிந்து சூழ்தலும் , தும்பை யுழிஞை முதலிய போர்புரிதலும் முதலாயின. வலிமைப்படுத்தலாவது . பொருள் படைதுணைகளைப் பெருக்குதல் . தற்காத்தலாவது பல்வகையரணும் அமைத்துக் கொள்ளுதல் . இறுமாப்புத்தம்மை யெவரும் வெல்ல முடியா தென்றும் தாம்பிறரை எளிதாய் வெல்ல முடியுமென்றும் மகிழ்ந்திருத்தல் . இக்குறளாற் போர் செய்யாமலே பகைவரை விலக்கும் வகை கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒரு செயலைச் செய்ய வேண்டிய முறையை அறிந்து, நம்மைப் பலப்படுத்துவதுடன் ரகசியங்களையும் நாம் காத்துக் கொண்டால், பகைவர் தங்கள் மனத்துள் நம்மை எதிர்க்க எண்ணிய செருக்கு அழியும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஆதலால், பகைவர்களால் துன்பம் அடையாமல் இருக்க வேண்டுமானால் யுத்தம் வருமுன்னாலேயே மேலே சொல்லப் பட்ட முறையில்) தனக்குள்ள பகைவரின் வகையை அறிந்து அதற்கிணங்கத் தன்னைப் பலப்படுத்திக் கொண்டு தற்காப்புக்கான காரியங்களைச் செய்து கொண்டால் பகைவர்களுடைய ஆணவம் அழிந்து விடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தான் தொழில் செய்யும் வகையினை அறிந்து அது முடித்தற்கேற்றபடி தன்னைப் பெருக்கிக் காத்துக் கொண்டால் தனது பகைவரிடத்தில் உள்ள செருக்கு கெட்டுவிடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
செய்யும் வகையறிந்து, தன்னை வலிமைப் படுத்தி தற்காப்பு செய்து கொண்டால் பகைவர் தன் செருக்கு தானாக அழியும்
|
|
Translation
|
|
Know thou the way, then do thy part, thyself defend;
Thus shall the pride of those that hate thee have an end.
|
|
Explanation
|
|
The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.
|
|
Transliteration
|
|
Vakaiyarindhu Tharseydhu Tharkaappa Maayum
Pakaivarkan Patta Serukku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|