|
ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பேதைமையுள் எல்லாம் பேதைமை - ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது; கையல்லதன்கண் காதன்மை செயல் - தனக்காகாத ஒழுக்கத்தின்கண் காதன்மை செய்தல். (இருமைக்கும் ஆகாதென்று நூலோர் கடிந்த செயல்களை விரும்பிச் செய்தல் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பேதைமையது இலக்கணம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அறியாமை யெல்லாவற்றுள்ளும் அறியாமையாவது தனக்குக் கைவராத பொருளின்கண் காதன்மை செய்தல். இது வருந்தினாலும் பெறாததற்குக் காதல் செய்தலும் பேதைமையென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பேதைமையுள் எல்லாம் பேதைமை - பேதைமைக் குற்றங்களெல்லாவற்றுள்ளும் கொடியதாவது; கை அல்லதன்கண் காதல் செயல் - ஒருவன் தனக்குத்தகாத ஒழுக்கத்திற் பெருவிருப்பங் கொள்ளுதல். கையல்லது செய்தல் , இருமைக்கும் ஆகாதென்று அறநூலாற் கடியப் பட்டனவும், தன் நிலைமைக்கு ஏற்காதனவுமான தீய செயல்களைச் செய்தொழுகுதல். 'கை' ஒழுக்கம்; ஆகுபெயர்.
|
|
கலைஞர் உரை:
|
|
தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
முட்டாள்தனங்களிளெல்லாம் அதிக முட்டாள்தனம் எதுவென்றால், தீமையான காரியத்திலேயே அதிக ஆசைகொண்டு நடந்துகொள்வது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பேதைமைகளுக்கெல்லாம் மிகுந்த பேதைமை என்னவென்றால், தன்னால் முடியாத செயல்களில் மிக்க விருப்பத்தினைக் கொண்டு செய்தலாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது யாதெனில் தகாத செயல்களைச் செய்வதில் ஆர்வம் உடையதாய் இருத்தல்.
|
|
Translation
|
|
'Mid follies chiefest folly is to fix your love
On deeds which to your station unbefitting prove.
|
|
Explanation
|
|
anation:
The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden.
|
|
Transliteration
|
|
Pedhaimaiyul Ellaam Pedhaimai Kaadhanmai
Kaiyalla Thankat Seyal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|