|
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பேதைமை என்பது ஒன்று - பேதைமை என்று சொல்லப்படுவது ஒருவனுக்கு ஏனைய குற்றங்கள் எல்லாவற்றினும் மிக்கதொன்று; யாது எனின் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் - அதுதான் யாதென்று வினவின், தனக்குக் கேடு பயப்பனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கைவிடுதல். (கேடு - வறுமை, பழி, பாவங்கள், ஆக்கம் - செல்வம், புகழ், அறங்கள், தானே தன் இருமையும் கெடுத்துக் கோடல் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அறியாமையென்று சொல்லப்படுவதொன்று யாதெனின், அது குற்றம் பயப்பனவற்றைக் கொண்டு நன்மை பயப்பனவற்றைப் போகவிடல். இது பேதைமையின் இலக்கணம் கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பேதைமை என்பது ஒன்று யாது எனின் - பேதைமை என்று சொல்லப்படும் ஒரு குற்றம் என்னது என்று வினவின்; ஏதம் கொண்டு ஊதியம் போகவிடல் - தனக்கு கேடு தருவனவற்றைக் கைக்கொண்டு ஆக்கந் தருவனவற்றை விட்டு விடல். கேடுதருவன வறுமை, நோய் , அறங்கடை (பாவம்) பழி, அறியாமை , பகை முதலியன. ஆக்கந் தருவன செல்வம் , உடல் நலம் , அறம் , புகழ் , அறிவு , நட்பு முதலியன. ஆகவே , பேதைமை யென்பது தானே இருமையின்பமும் புறக்கணித்தல் என்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
முட்டாள்தனம் என்பது எதுவென்றால், தீமையைப் பிடித்துக் கொண்டு நன்மையை விட்டுவிடுவது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பேதைமை என்று சொல்லப்படுவது எல்லாக் குற்றங்களிலும் மிக்கதாகும். அது யாதென்று கேட்டால், தமக்குக் கெடுதி உண்டாக்குவதைக் கைக்கொண்டு ஆக்கம் தருவதை விட்டு விடுவதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பேதைமை என்கிற அறியாமை யாதெனில் கேடு தருவனவற்றை ஏற்றுக்கொண்டு நன்மை தருவனவற்றை விட்டுவிடுதல் ஆகும்.
|
|
Translation
|
|
Familiarity What one thing merits folly's special name.
Letting gain go, loss for one's own to claim!.
|
|
Explanation
|
|
Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain.
|
|
Transliteration
|
|
Pedhaimai Enpadhondru Yaadhenin Edhangontu
Oodhiyam Poka Vital
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|