|
கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - நமக்குத் தகுவது இது என்று அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்லனவாய குணங்கள் எல்லாம் இயல்பாயிருக்கும் என்று சொல்லுவர் நூலோர். (சில குணங்கள் இலவாயவழியும், உள்ளன செய்துகொண்டனவாய வழியும் சான்றாண்மை என்னும் சொற்பொருள் கூடாமையின், நூலோர் இவ்வேதுப் பெயர் பற்றி அவர் இலக்கணம் இவ்வாறு கூறுவர் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நமக்குத் தகுவது இதுவென்றறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு நல்லனவாய குணங்களெல்லாம் இயல்பாயிருக்குமென்று சொல்லுவர் நூலோர்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - இது நமது கடமையென் றறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்வினைகளெல்லாம் செய்யப்பட வேண்டிய கடமையாகும் என்று கூறுவர் அறிஞர். சான்றாண்மை நற்குணத் தொகுதியாதலின் அதை மேற்கொண்டவர்க்கு நல்வினையெல்லாங் கடமை யென்பது கருத்து.கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - இது நமது கடமையென் றறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்வினைகளெல்லாம் செய்யப்பட வேண்டிய கடமையாகும் என்று கூறுவர் அறிஞர். சான்றாண்மை நற்குணத் தொகுதியாதலின் அதை மேற்கொண்டவர்க்கு நல்வினையெல்லாங் கடமை யென்பது கருத்து.
|
|
கலைஞர் உரை:
|
|
ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(எல்லா நல்ல குணங்களும் சேர்ந்த நிறைகுணம் என்னும்) சான்றாண்மையுள்ளவர்கள் தம்முடைய அறிவுக்கு நல்ல காரியம் என்று தெரிகிற எல்லாக் காரியங்களையும் கட்டாயமாகச் செய்யவேண்டிய கடமைகளாகவே செய்வார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தமக்குச் சிறந்தது என்று அறிந்து சான்றாண் மையினை மேற்கொண்டு நடப்பவர்களுக்கு நல்ல குணங் கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று நூலோர் சொல்லுவர்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தன்கடமையை உணர்ந்து சான்றாண்மைப் பண்புகளை மேற்கொண்டு ஒழுகுபவர்களுக்கு நற்செயல்கள் யாவுமே அவர்கள் தம் கடமையாகும்.
|
|
Translation
|
|
All goodly things are duties to the men, they say
Who set themselves to walk in virtue's perfect way.
|
|
Explanation
|
|
It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good.
|
|
Transliteration
|
|
Katanenpa Nallavai Ellaam Katanarindhu
Saandraanmai Merkol Pavarkku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|