Thirukural

பெருமை பெருமிதம் இன்மை சிறுமைபெருமிதம் ஊர்ந்து விடல்.

பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பெருமை பெருமிதம் இன்மை - பெருமைக்குணமாவது காரணமுண்டாய வழியும் அஃது இயல்பாதல் நோக்கித் தருக்கின்றியிருத்தல்; சிறுமை பெருமிதம் ஊர்ந்துவிடல் - சிறுமைக் குணமாவது அஃது இல்வழியும் அதனை ஏற்றுக்கொண்டு தருக்கின் முடிவின்கண்ணே நின்றுவிடுதல். ('அளவறத் தருக்குதல்' என்பதாயிற்று. 'விடும்' என்று பாடம் ஓதுவாரும் உளர், முற்றுத்தொடரும் எழுவாய்த் தொடரும் தம்முள் இயையாமையின், அது பாடமன்மை உணர்க.)
மணக்குடவர் உரை:
பெருமையுடையவர் நெறியினானே செய்யவல்லர்: செய்தற்கு அருமையுடைய செயல்களை. இது செய்தற்கு அரிய செய்வார் பெரியரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
பெருமை பெருமித மின்மை - பெருமைக் குணமாவது பெருமிதத்திற் கேற்ற சிறப்பிருந்தும் அதை யியல்பெனக் கொண்டு அமைந்திருத்தல்; சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல் - சிறுமைக் குணமாவது ஒரு சிறப்பும் இல்லாதிருந்தும் அதைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு செருக்கின் எல்லைவரை சென்றுவிடுதல். இங்கும் மாந்தர் செயல்கள் அவர் பண்பின்மேல் ஏற்றிக் கூறப்பட்டன. 'ஊர்ந்துவிடல்' முடிவிடம்வரை ஏறிச்செல்லுதல் ; குறிப்புருவகம், 'விடும்' என்பது மணக்குடவ காலிங்கர் பாடம்.
கலைஞர் உரை:
ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(மேலும்) பெருமைக் குணம் என்பது அகங்காரமே இல்லாதிருப்பது. சிறுமைக்குணம் என்பது அகங்காரமே நடத் தையாக உள்ளது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பெருமைக்குணம் என்பதாவது காரணம் உண்டானபோதும் தருக்கின்றி இருத்தலாகும். சிறுமைக் குணமாவது காரணமின்றியே தன்னைச் செருக்கின்கண் நிறுத்திக் கொள்ளுவதாகும்.
தமிழ்க்குழவி உரை:
பெருமை என்பது தற்பெருமை கொள்ளாது நடந்து கொள்வது. சிறுமை என்பது தற்பெருமையால் தானே தருக்கிக் கொள்வது.
Translation
Greatness is absence of conceit; meanness, we deem, Riding on car of vanity supreme.
Explanation
Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness.
Transliteration
Perumai Perumidham Inmai Sirumai Perumidham Oorndhu Vital

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 979