|
மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மாந்தர் - குடிப்பிறந்த மாந்தர்; நிலையின் இழிந்தக்கடை - தம் உயர்ந்த நிலையைவிட்டு அதனின்றும் தாழ்ந்த வழி; தலையின் இழிந்த மயிர் அனையர் - தலையை விட்டு அதனினின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர், {அந்நிலையை விடாது நின்ற வழிப் பேணப்படுதலும,் விட்டுத் தாழ்ந்த வழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
|
|
கலைஞர் உரை:
|
|
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
மனிதர்கள் மானம் என்ற உயர்ந்த நிலையிலிருந்து தவறி விட்டால் தலையிலிருந்து வேரோடு விழுந்துவிட்ட மயிருக்குச் சமானமாக மதிப்பாரற்றுப் போவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நற்குடியில் பிறந்த மக்கள் தம்முடைய உயர்ந்த நிலையைவிட்டுத் தாழ்ந்தபோது தலையைவிட்டு நீங்கி வீழ்ந்த மயிரினை ஒப்பர்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மனிதர்கள் உயர்ந்த தம் பண்புகளிலிருந்து இழிந்து விடுவார்களாயின், தலையிலிருந்து உதிர்ந்து விடும் மயிருக்கு ஒப்பாகவே கருதப்படுவர்.
|
|
Translation
|
|
Like hairs from off the head that fall to earth,
When fall'n from high estate are men of noble birth.
|
|
Explanation
|
|
They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.
|
|
Transliteration
|
|
Thalaiyin Izhindha Mayiranaiyar Maandhar
Nilaiyin Izhindhak Katai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|