|
மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நல்நுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர் - தாம் வேண்டியவாறன்றித் தம் மனையாள் வேண்டியவாறு ஒழுகுவார்; நட்டார் குறை முடியார் - தம்மொடு நட்புச் செய்தார் உற்ற குறை முடிக்கமாட்டார்; நன்று ஆற்றார் - அதுவேயன்றி மறுமைக்குத் துணையாய அறஞ்செய்யவும் மாட்டார். ('நல்நுதலாள்' என்பதனை 'அமை ஆர் தோள்' (குறள்-906) என்புழிப் போலக் கொள்க. அவள் தானே அறிந்து ஏவலும், பொருள் கொடுத்தலும் கூடாமையின், இருமைக்கும் வேண்டுவன செய்யமாட்டார் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நல்ல நுதலினை யுடையாள் விரும்பியவாறு செய்தொழுகுவார், தம்மோடு நட்டார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நல் நுதலாள் பெட்ட ஆங்கு ஒழுகுபவர்- தாம் விரும்பிய வாறன்றி அழகிய நெற்றியையுடைய தம் மனைவி விரும்பிய வாறே நடப்பவர்; நட்டார் குறை முடியார்-தம் நண்பருக்குத் தேவையானவற்றைச் செய்து தீர்க்க மாட்டார்; அன்றி ஆற்றார்-அதோடு மறுமைக்குத் தமக்குத் துணையான அறமுஞ் செய்ய மாட்டார். மனைவியின் விருப்பப்படி யொழுகுதற்குக் கரணியமான நெற்றியழகு பற்றியும், அங்ஙனம் ஒழுகாவிடின் செ்ய்யும் நெற்றி நெறிப்புப் (browbeating) பற்றியும், 'நன்னுதலாள்' என்றார். நட்டார் குறை முடித்தலையும் நன்றாற்றலையும் மனைவியுஞ் செய்யாமையின் இருமைக்கும் வேண்டுவன செய்யப்படா என்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
மனைவியின் இச்சைப்படியே எதையும் செய்கிறவர்கள், நண்பர்களுக்கு நேரிடும் துன்பங்களைத் தீர்க்க உதவமாட்டார்கள்; வேறு எந்த நல்ல காரியமும் செய்ய முடியாதவர்களாவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தன் விருப்பப்படி அல்லாமல் தனது மனையாள் வேண்டியவாறு நடப்பவர் தம்முடன் நட்பு கொண்டவர் குறையினை முடிக்க மாட்டார். நல்ல அறச் செயலையும் செய்ய மாட்டார்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அழகிய நெற்றியுடைய மனைவிக்கு அடிமையாகி வாழ்பவர் நண்பர்தம் குறைகளையார், மற்றெவர்க்கும் நன்மை செய்யார்.
|
|
Translation
|
|
In Who to the will of her with beauteous brow their lives conform,
Aid not their friends in need, nor acts of charity perform.
|
|
Explanation
|
|
Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.
|
|
Transliteration
|
|
Nattaar Kuraimutiyaar Nandraatraar Nannudhalaal
Pettaangu Ozhuku Pavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|