|
(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை - நீதிநூலைக் கல்லாதானோடு பகைத்தலான் வரும் எளிய பொருளை மேவாதானை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது - எஞ்ஞான்றும் புகழ் மேவாது. (சிறு பொருள் - முயற்சி சிறிதாய பொருள். நீதி அறியாதானை வேறல் எளிதாயிருக்கவும், அது மாட்டாதானை வெற்றியான் வரும் புகழ் கூடாது என்பதாம், ஆகவே இச்சிறிய முயற்சியாற் பெரிய பயன் எய்துக என்றவாறாயிற்று. இதற்குப் பிறரெல்லாம் அதிகாரத்தோடு மாறாதன் மேலும் ஒரு பொருள் தொடர்பு படாமல் உரைத்தார். இவை மூன்று பாட்டானும் அதனினாய பயன் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கல்லாதானுமாய், வெகுளியுடையனுமாய்ச் சிறு பொருளனுமாகிய பகைவனை எல்லாநாளும் ஒளி பொருந்தாது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கல்லான் வெகுளும் சிறு பொருள் ஒல்லானை - அரசியல் நூல் அறியாதவனைப் பகைத்தால் வரும் எளியவழிப் பொருளோடு பொருந்தாதவனை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது-ஒரு போதும் புகழ் பொருந்தாது. ’சிறுபொருள்’ சிறுமுயற்சியால் வரும் பொருள். சிறு முயற்சியே செய்யமாட்டாதவன் ஒருகாலும் பெருமுயற்சி மேற்கொள்ளானாகலின் ’எஞ்ஞான்றும் .... ஒல்லா தொளி’ என்றார். ஒளி என்பது வாழ்நாட்காலத்து இசை.
|
|
கலைஞர் உரை:
|
|
பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(சுருக்கமாக) பகைவர்களை வெல்லும் முறைகளைக் கற்றுக்கொள்ளாதவனாகவும், உடனிருப்பவர்கள் விலகிவிடும்படி எந்நேரமும் கோபிக்கிறவனாகவும், துணைவர்களைத் தேடிக் கொள்ளவும் செலவு செய்யவும் மனம் வராதவனாகவும் உள்ளவனுக்கு ஒரு நாளும் வெற்றி கிடைக்காது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நீதி நூல்களைக் கல்லாதவனோடு பகைத்த லால் வருகின்ற எளிய பொருள்களை மேற்கொள்ளாத வனை எக்காலத்திலும் புகழ் வந்து சேராது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கல்லாதவனாய் எதற்கும் சினவயப்படுபவனாய் இருக்கும் ஒருவனுக்கு எக்காலத்தும் புகழ்வந்து பொருந்தாது.
|
|
Translation
|
|
The task of angry war with men unlearned in virtue's lore
Who will not meet, glory shall meet him never more.
|
|
Explanation
|
|
The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe).
|
|
Transliteration
|
|
Kallaan Vekulum Siruporul Egngnaandrum
Ollaanai Ollaa Tholi
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|