|
இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் - தன் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை எதிர்தலையொழிதல் ஒருவனுக்கு ஆக்கம் ஆம்; அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம் - அது செய்யாது அதன்கண் மிகுதலை மேற்கொள்வானாயின் கேடும் தன்கண் வருதலை மேற்கொள்ளும். (எதிர்தல் - ஏற்றுக்கோடல், சாய்ந்த பொழுதே வருதலின், சாய்தல் ஆக்கம் என்றார். 'இகலிற்கு' எனவும், 'அதனை' எனவும் வந்தன வேற்றுமை மயக்கம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மாறுபாட்டிற்குச் சாய்தொழுகுதல் ஆக்கமாம்: அதனை மிகுதலை நினைக்கின் கேடு மிகும். இது மாறுபாட்டிற்குச் சாய்ந்தொழுகல் வேண்டுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் - தன் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை எதிர்தலையொழிதல் ஒருவனுக்கு ஆக்கம் ஆம்; அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம் - அது செய்யாது அதன்கண் மிகுதலை மேற்கொள்வானாயின் கேடும் தன்கண் வருதலை மேற்கொள்ளும். (எதிர்தல் - ஏற்றுக்கோடல், சாய்ந்த பொழுதே வருதலின், சாய்தல் ஆக்கம் என்றார். 'இகலிற்கு' எனவும், 'அதனை' எனவும் வந்தன வேற்றுமை மயக்கம்.).
|
|
கலைஞர் உரை:
|
|
மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மனவேறுபாடு தோன்றும்போது அதை வரவேற்காமல் இருப்பது ஒருவனுக்குச் செல்வமாகும்; வரவேற்பது கேட்டையே வரவேற்பதாகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஆகையினால்) மனத்தாபத்துக்கு மனத்தில் இடங் கொடுக் காமல் ஒதுக்கிவிடுவதுதான் வல்லமை. அதை மீறவிட்டுக் கோபங் கொள்வதனால் கேடுண்டாவது நிச்சயம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மனத்தில் மாறுபாடு தோன்றிய போது அதனை நீக்குதல் ஒருவனுக்கு ஆக்கம் தரும். அதனைச் செய்யாமல் அதனை மேற்கொள்ளுவானானால் கேடும் தனக்கு வந்து சேரும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மாறுபட்ட சிந்தனைகளை விட்டு உடன்பட்டு வாழ நினைப்பவர்களுக்கே மேன்மை உண்டு. மாறுபாட்டையே மேலும் விரும்பினால் கேடு உண்டாகும்
|
|
Translation
|
|
'Tis gain to turn the soul from enmity;
Ruin reigns where this hath mastery.
|
|
Explanation
|
|
Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin.
|
|
Transliteration
|
|
Ikalirku Edhirsaaidhal Aakkam Adhanai
Mikalookkin Ookkumaam Ketu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|