Thirukural

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்இன்னா அறிவி னவர்.

இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இகல் மேவல் இன்னா அறிவினவர் - இகலோடு மேவுதலையுடைய இன்னாத அறிவினையுடையார்; மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் - வெற்றி பொருந்துதலையுடைய நீதி நூற்பொருளை அறியமாட்டார். (இன்னா அறிவு -தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு.வெற்றி - வழிநின்றார்க்கு உளதாவது. காணப்படும் பயத்ததாகலின், 'மெய்ந்நூல்' எனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், காணார் என்றார். இவை இரண்டு பாட்டானும்இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
மிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப் பொருளைக் காணமாட்டார், மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறிவுடையார். இது மாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
இகல் மேவல் இன்னா அறிவினவர்- மாறுபாட்டை விரும்புகின்ற தீய அறிவினையுடையார்; மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார்- வெற்றியொடு பொருந்தும் அரசியலுண்மைகளை அறியமாட்டார். 'மெய்ப்பொருள்' தப்பாது வாய்க்கும் நெறிமுறைகள். 'இன்னா அறிவு' தமக்கும் தம்மைச் சார்ந்தவர்க்கும் தீங்கு விளைக்கும் அறிவு. இகலால் அகக்கண் மங்குதலால் 'காணார்' என்றார். இவ்விருகுறளாலும் இகலினார்க்கு வருந் தீங்கு கூறப்பட்டது.
கலைஞர் உரை:
பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஏனென்றால்) மனத்தாபம் கொண்டுவிட்டதனால் அறிவு கெட்டுப்போனவர்கள் அந்த மனத்தாபம் மிஞ்சும்போது கோபம் வந்துவிடுவதனால் எந்த விஷயத்திலும் உண்மையை அறிய முடியாத வர்களாகிவிடுகிறார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இசுலோடு சேர்ந்து ஒழுகுகின்ற துன்பமான அறிவினையுடையார் வெற்றியினைத் தருகின்ற நீதி நூற் பொருள்களை அறிந்து கொள்ள மாட்டார்கள்.
தமிழ்க்குழவி உரை:
மாறுபட்ட எண்ணங்களை உடைய பொருந்தாத அறிவினவர்கள் வாழ்வின் உண்மை நிலையை அறிந்து மேன்மையுற மாட்டார்கள்.
Translation
The very truth that greatness gives their eyes can never see, Who only know to work men woe, fulfilled of enmity.
Explanation
Those whose judgement brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.
Transliteration
Mikalmeval Meypporul Kaanaar Ikalmeval Innaa Arivi Navar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 857