|
ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கை அறியாப் பேதை வினைமேற் கொளின் - செய்யும் முறைமை அறியாத பேதை ஒரு கருமத்தை மேற்கொள்வானாயின், பொய்படும் ஒன்றோ புனைபூணும் - அதுவும் புரைபடும், தானும் தளை பூணும். (புரைபடுதல் - பின் ஆகாவகை உள்ளழிதல். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். அதனையும் கெடுத்துத் தானும் கெடும் என்பதாம். இதனான் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒழுக்கமறியாதா னொருபேதையான் ஒருகருமத்தை மேற்கொண்டானாயின், அப்பொழுது பொய்யனென்னவும் பட்டுப் பிறர்க்குப் புனைபூணும். புனைபூணல் - சிறைபடுதல்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கை அறியாப் பேதை வினைமேற்கொளின் - செய்யும் வகை யறியாத பேதை ஒரு கருமத்தை யேற்றுச் செய்யின்; பொய்படும் ஒன்றோ - அதிற் புரைவிழுதல் மட்டுமோ. புனைபூணும் - அவன் குற்றப்பட்டு விலங்கு பூணுதலும் நிகழும். 'புரைவிழுதல்' துளைபடுதல் போல் உள்ளழிதல். 'புனை முதனிலைத் தொழிலாகுபெயர். பேதை வினைசெய்யின் வினையுங்' கெட்டுத் தானும் கெடுவான் என்பதாம். பொள் - பொய்.
|
|
கலைஞர் உரை:
|
|
நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
முட்டாள், செய்யத் தெரியாத காரியத்தைச் செய்யத் தெரிந்ததாக மேற்கொள்வான். அதனால் அவன் செய்யத் தெரியும் என்று சொன்னது பொய்யாவது மட்டுமல்லாமல், அந்தக் காரியம் மற்றவர்களும் பின் சரி செய்ய முடியாதபடி சிக்குண்டாகிக் கெட்டுப் போகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
செய்யும் முறையறியாத பேதை ஒரு காரியத்தை மேற்கொண்டால் அக்காரியமும் கெடும்; அவனும் தானே தளை பூணுகின்ற நிலைமையினையும் அடைவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒரு செயலை எவ்வாறு செய்து முடிக்க வேண்டும் என்று அறியாமல் தொடங்கும் ஒரு பேதையின் தொழில் ஒன்று நிறைவடையா தொழியும், அல்லது பழிகூட்டும்.
|
|
Translation
|
|
When fool some task attempts with uninstructed pains,
It fails; nor that alone, himself he binds with chains.
|
|
Explanation
|
|
If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all ? He will even adorn himself with fetters.
|
|
Transliteration
|
|
Poipatum Ondro Punaipoonum Kaiyariyaap
Pedhai Vinaimer Kolin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|