|
மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மனத்தின் அமையாதவரை - மனத்தால் தம்மொடு மேவாதாரை; எனைத்து ஒன்றும் சொல்லினால் தேறல்பாற்று அன்று - யாதாரு கருமத்தினும் சொல்லால் தெளிதல் முறைமைத்தன்று, நீதிநூல். ('நீதி நூல்' என்பது அவாய் நிலையான் வந்தது. பகைமை மறைத்தற்பொருட்டுச் சொல்லுகின்ற வஞ்சனைச் சொல்லைச் செவ்விய சொல் எனக் கருதி, அவரைக் கருமங்களில் தெளிதல் நீதிநூல் முறைமை அன்று என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மனத்தால் பொருத்தமில்லாதவரை யாதொன்றன் கண்ணும் அவர் சொல்லினால் தௌ¤தற்பாலதன்று. இது சொல்லினால் அறிதலரிதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மனத்தின் அமையாதவரை-உள்ளத்தால் தம்மோடு பொருந்தாதவரை; எனைத்து ஒன்றும்-எத்தகைய வினையிலும்; சொல்லினால் தேறற்பாற்று அன்று-அவர் சொல்லைக்கொண்டு அவரை நம்பத்தக்க முறைமைத்தன்று அரசியல் நூல். 'எனைத்தொன்றும்' என்பதற்கு, எத்துணைச் சிற்றளவும் என்று உரைப்பினும் அமையும், அன்மைச்சொல் அரசியல் நூல் என்பதை அவாவி நின்றது. பகைமையை மறைத்துச் சொல்லும் வஞ்சனைச் சொல்லை மெய்யென்று கொண்டு, அவரை எவ்வினைக்கும் நம்புவது அரசியல்நூல் முறைமையன் றென்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அன்றியும்) மனத்திற்கு ஒவ்வாதவராகிய பகைவரை அவர்கள் எவ்வளவு நல்ல வார்த்தைகளைப் பேசினாலும் அந்தப் பேச்சைக் கொண்டு நம்பிவிடக்கூடாது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மனத்தினால் தம்முடன் பொருந்துதல் இல்லாதவர்களை எவ்விதமான செயலிலும் சொல்லினால் தெரிந்து கொள்ளும் முறையானது கூடாது என்பதாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மனத்தளவில் உடன்படாதவர்களோடு, அவர்கள் சொற்களை வைத்து நம்பி நட்பு பாராட்டாமல் தெளிதல் நன்று.
|
|
Translation
|
|
When minds are not in unison, 'its never; just,
In any words men speak to put your trust.
|
|
Explanation
|
|
In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.
|
|
Transliteration
|
|
Manaththin Amaiyaa Thavarai Enaiththondrum
Sollinaal Therarpaatru Andru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|