|
அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அழிவந்த செய்யினும் அன்பு அறார் - நட்டார் தமக்கு அழிவு வந்தவற்றைச் செய்தாராயினும் அவர் மாட்டு அன்பு ஒழியார்; அன்பின் வழிவந்த கேண்மையவர் - அன்புடனே பழையதாய் வந்த நட்பினை உடையார். ('அழி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். அழிவு - மேற்சொல்லிய கேடுகள். இவை இரண்டு பாட்டானும் கேடு செய்தக்கண்ணும் நட்பு விடற்பாற்றன்று என்பது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தமக்கு அழிவுவரும் கருமங்களைப் பழைய நட்டோர் செய்தாராயினும் அவரோடு உள்ள அன்புவிடார்: முற்காலத்து அன்பின் வழியாக வந்த நட்பையுடையவர். இது கேடுவருவன செய்யினும் அமைய வேண்டு மென்றது
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அன்பின் வழிவந்த கேண்மையவர்-அன்போடு கூடிப் பழைமையாக வந்த நட்பையுடையார்; அழிவந்த செய்யினும் அன்பு அறார்-தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றைச் செய்தாராயினும் அவர்பால் அன்பு நீங்கார். 'அழி' முதனிலைத் தொழிற்பெயர். 'அழிவா' முதனிலை. உம்மை இழிவு சிறப்பு. இன்னா செயினும் விடுதற் கரியாரைத் துன்னார் துறத்தல் தவறுவதோ-துன்னருஞ்சீர் விண்குத்து நீள்வரை வெற்ப களைபவோ கண்குத்திற் றென்றுதங் கை."
|
|
கலைஞர் உரை:
|
|
தம்முடன் பழகியவர்கள் தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைச் செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக் கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார்
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றையே செய்தாலும் நெடுங்காலமாக நட்பை உடையவர் நண்பர்மீது தாம் கொண்ட அன்பை விட்டுவிடமாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பழைமை பற்றிய நண்பர்கள் வேண்டுமென்றே அழிவு தரக்கூடிய காரியத்தைச் செய்துவிட்டாலும் வழிவழியாக அன்பு பற்றித் தொடர்ந்து வரும் நட்பை மதிக்கிறவர்கள் அவர்களிடம் அன்பற்று நடந்து கொள்ளமாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பழைமையாய் வந்த நட்பினை உடையவர்கள் தமக்கு அழிவு வருவனவற்றை நண்பர்கள் செய்தாலும் அவர்களிடம் கொண்டுள்ள அன்பிலிருந்து நீங்கமாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அழிவைத் தருவதாகிய கேடு செய்யினும் நீண்ட நாள் பழகிய நண்பர்கள் அன்பில்லாமல் நடந்து கொள்ள மாட்டார்கள்.
|
|
Translation
|
|
Waters True friends, well versed in loving ways,
Cease not to love, when friend their love betrays.
|
|
Explanation
|
|
Those who have (long) stood in the path of affection will not give it up even if their friends cause (them) their ruin.
|
|
Transliteration
|
|
Azhivandha Seyyinum Anparaar Anpin
Vazhivandha Kenmai Yavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|