|
நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை - நட்பிற்கு அவயவமாவன நட்டார் உரிமையால் செய்வன; அதற்கு உப்பாதல் சான்றோர் கடன் - அதனால் அவ்வுரிமைக்கு இனியராதல் அமைந்தார்க்கு முறைமை. (வேறன்மை தோன்ற 'உறுப்பு' என்றார். உறுப்பு என்பது ஈண்டு இலக்கணையடியாக வந்த குறிப்புச் சொல். அவயவமாதல் அறிந்தே இனியவராவர் என்பது தோன்றச் சான்றோர்மேல் வைத்தார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நட்பிற்கு அங்கமாவது உரிமை: அவ்வுரிமையால் செய்யுமதற்கு உடன்படுதல் சான்றோர்க்கு இயல்பு. இது பேய்ச்சுரைக்காய்க்குப் பல காயம் அமைத்தாலும் இனிமை யுண்டாகாதுபோல, உடன்படாராயின் இனிமை உண்டாகாதாதலான் உடன்படல் வேண்டு மென்றது
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை-நட்பிற்கு உறுப்பாவது விரும்பியன செய்தற்குரிய உரிமை; அதற்கு உப்புஆதல் சான்றோர் கடன்-அதனால் அவ்வுரிமைக்குச் சுவையூட்டுவதுபோல் துணையாதல் அறிவுடையோர் கடமையாம். உரிமை, கிழமை, கெழுதகைமை என்பன ஒருபொருட் சொற்கள். 'நட்பிற் குறுப்பு' என்றமையால், கெழுதகைமை யில்லா நட்பு உறுப்பறைபோல நிறைவில்லாத தென்பதாம். இவ்வுண்மையை அறியாதார் கெழுதகைமைக்கு உடன்படாவிடினும், அறிந்தார் உடம்பட வேண்டுமென்றற்குச் 'சான்றோர் கடன்' என்றார். 'மற்று' அசைநிலை.
|
|
கலைஞர் உரை:
|
|
பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏனெனில்) நட்புக்கு அடையாளம் ஒருவரிடம் ஒருவர் கொண்டாடும் உரிமை. அந்த உரிமை கெட்டுப்போகாமல் தக்கபடி நடந்துகொள்ள வேண்டியது நல்லவர்களுடைய கடமை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நட்பினுக்கு உறுப்புக்களானவை யாவை என்றால் நண்பர்கள் உரிமையால் செய்வனவேயாகும். அந்த உரிமைக்கு உடன்பட்டு இனியவராதல் பெரியோர் களுக்கு முறையான கடமையாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நட்பிற்கு உறுப்பாக விளங்குவது உரிமை பாராட்டிப் பழகும் தன்மை. அதற்கு மேலும் உப்பாகச் சுவை கூட்டல் சான்றோர் கடமை.
|
|
Translation
|
|
Familiar freedom friendship's very frame supplies;
To be its savour sweet is duty of the wise.
|
|
Explanation
|
|
The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise.
|
|
Transliteration
|
|
Natpir Kuruppuk Kezhudhakaimai Matradharku
Uppaadhal Saandror Katan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|