|
பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கெழுதகைமை செய்தாங்கு அமையாக்கடை - தாம் உடம்படாதனவேனும் நட்டார் உரிமையாற் செய்தனவற்றிற்குத் தாம் செய்தாற் போல உடம்படாராயின்; பழகிய நட்பு எவன் செய்யும் - அவரோடு பழையதாய் வந்த நட்பு என்ன பயனைச் செய்யும்? (செய்தார் போல உடம்படுதலாவது, தாமும் அவரிடத்து உரிமையால் உடம்படுதல். இவை இரண்டு பாட்டானும் பழைமையான் வரும் உரிமையது சிறப்புக் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையை யறியவல்லார்க்கு நட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம். இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டுமென்றது
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கெழுதகைமை செய்த ஆங்கு அமையாக்கடை-நெடுங்கால நண்பர் தம் நட்புரிமையாற் செய்தவற்றிற்குத் தாமே அவற்றைச் செய்தாற்போல உடம்படாவிடின்; பழகிய நட்பு எவன் செய்யும்-பழைமையாக அவருடன் வந்த நட்பு என்ன பயன் படுவதாம்? செய்தாற்போல வுடம்படுதலாவது தம்மையும் அவரையும் வேறுபடக் கருதாமை.
|
|
கலைஞர் உரை:
|
|
பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத்தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப்போகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பழைமைபற்றி ஒருவர் இன்னொருவருக்காக ஒரு காரியத்தைச் செய்துவிட்டால் அதை அப்படியே ஒத்துக்கொள்வது தான் முறை. இல்லாவிட்டால் பழகிய நட்பு என்பதனால் என்ன பயன்?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நட்பினர் உரிமையால் செய்தவைகளைத் தாமே செய்ததுபோல உடன்படாராயின் பழமையால் வந்த நட்பு என்ன பயனைச் செய்யும்?
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நீண்டகாலமாகப் பழகிய உரிமையால் நண்பர் ஒருவர் செய்யும் செயலுக்கு தாமும் இசைவுடையவராக அமையாக்கால் அந்நட்பால் என்ன பயன்?
|
|
Translation
|
|
When to familiar acts men kind response refuse,
What fruit from ancient friendship's use?.
|
|
Explanation
|
|
Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy ?.
|
|
Transliteration
|
|
Pazhakiya Natpevan Seyyung Kezhudhakaimai
Seydhaangu Amaiyaak Katai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|