|
இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இன்பத்துள் இன்பம் விழையாதான் - வினையால் தனக்கு இன்பம் வந்துழி அதனை அனுபவியாநின்றே மனத்தான் விரும்பாதான்; துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் - துன்பம் வந்துழியும் அதனை அனுபவியாநின்றே மனத்தான் வருந்தான். (துன்பம் - முயற்சியான் வரும் இடுக்கண். இரண்டையும் ஒரு தன்மையாகக் கோடலின், பயன்களும் இலவாயின.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாதவன், அதனால் வருந்துன்பம் நுகருமிடத்து வருத்த முறுதலிலன். இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாமையாவது அவ்விடத்துத் தான் அழிந்து நில்லாமை. இது காமத்தால் வருந்துன்பத்திறகு அழியாதாரைக் கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இன்பத்துள் இன்பம் விழையாதான் - இயற்கை யாகவோ தன் முயற்சியாலோ தனக்கு இன்பம் வந்த விடத்து அதை நுகர்ந்தும் உள்ளத்தால் இன்புறாதவன்; துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் - அவ்விரு வழியிலும் தனக்குத் துன்பம் வந்த விடத்து அதை நுகர்ந்தும் மனத்தால் துன்பமுறுவதில்லை. இன்பமுந் துன்பமும் ஒன்றாகக் கொள்பவன் இன்பத்தால் இன்புறுதலும் துன்பத்தால் துன்புறுதலும் இல்லை என்பதாம்
|
|
கலைஞர் உரை:
|
|
இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(துன்பம் வந்தால் நோகாமல் இருப்பது எப்படி யென்றால்) இன்பம் வருகிறபோது மகிழ்ச்சியில் மயங்கிவிடாமல் இருந்தால் இடையூறு வருகிறபோதும் துன்பத்தால் நொந்துபோகாமல் இருக்க முடியும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தனக்கு இன்பம் வந்தபோது அதனை அனுபவித்து மனத்தால் விரும்பாதவன், துன்பம் வந்த போதும் அதனை அனுபவித்து மனத்தால் வருந்து. மாட்டான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
துன்பம் வருகின்ற போது எழுச்சி கொண்டு பெரிதும் பூரிக்காதவன் துன்பம் வருகின்ற போது வாழ்வில் துவண்டு போவதில்லை.
|
|
Translation
|
|
Mid joys he yields not heart to joys' control.
Mid sorrows, sorrow cannot touch his soul.
|
|
Explanation
|
|
He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.
|
|
Transliteration
|
|
Inpaththul Inpam Vizhaiyaadhaan Thunpaththul
Thunpam Urudhal Ilan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|