|
இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் - தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தெளிந்திருப்பான்; துன்பம் உறுதல் இலன் - தன் முயற்சியால் துன்பமுறான். (இன்பத்தை விழையினும், இடும்பையை இயல்பு என்னாது காக்கக் கருதினும் துன்பம் விளைதலின்,இவ்விரண்டுஞ் செய்யாதானைத் 'துன்பம் உறுதல் இலன்' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
இன்ப முறுதலை விரும்பாது இடும்பை யுறுதலை இயல்பாகக் கொள்ளுமவன் துன்ப முறுதல் இல்லை. இஃது இடுக்கணை யியல்பாகக் கொள்ளல்வேண்டு மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இன்பம் விழையான் - இன்பத்தைச் சிறப்பாக விரும்பாது; இடும்பை இயல்பு என்பான் - இவ்வுலக வாழ்விலும் வினை முயற்சியிலும் துன்பம் நேர்வது இயல்பென்று தெளிந்திருப்பவன்; துன்பம் உறுதல் இலன் - துன்பம் வந்தவிடத்துத் துன்பமுறுத லில்லை. இன்பத்தைச் சிறப்பாக விரும்பாமையால் இன்பம் இல்லாவிடத்தும், ஆள்வினைஞன் துன்பமுறுதல் இல்லை யென்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படி) இன்பங்களில் ஆசை கொள்ளாமல் துன்பம் வருவது இயற்கைதான் என்று எண்ணுகிறவன் துன்பத்தால் பாதிக்கப்படமாட்டான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தனக்கு இன்பமானவற்றை விரும்பாமல், துன்பம் வந்தால் இயற்கையென்று உணர்ந்திருப்பவன் தனது முயற்சியால் துன்பம் அடையமாட்டான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
இன்பம் ஒன்றையே விரும்பாதவன் இடர்ப்பாடுகள் உலகஇயல்பு தான் என்று அறிந்து கொள்பவன்.வாழ்க்கையில் துன்பப்படுவது இல்லை.
|
|
Translation
|
|
He seeks not joy, to sorrow man is born, he knows;
Such man will walk unharmed by touch of human woes.
|
|
Explanation
|
|
That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).
|
|
Transliteration
|
|
Inpam Vizhaiyaan Itumpai Iyalpenpaan
Thunpam Urudhal Ilan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|