|
விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அடுக்கி வரினும் - இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும் - தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண்தாம் இடுக்கணிலே பட்டுப்போம். (ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க 'அடுக்கி வரினும்' என்றார். 'அழிவு' என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மேன்மேலே துன்பம் வந்தனவாயினும், மனனழிவில்லாதவன் உற்ற இடுக்கண், தான் இடுக்கண்படும். இது மனனழிவில்லாதவன் உற்றதுன்பம் மேன்மேல் வரினுங் கெடுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அடுக்கி வரினும் - இடைவிடாது துன்பங்கள் மேன்மேல் தொடர்ந்து வரினும்; அழிவு இலான் -மனங் கலங்காதவன்; உற்ற இடுக்கண் இடுக்கண் படும் -அடைந்த துன்பங்களே துன்பப்பட்டுப்போம். துன்பம் துன்பப்படும் என்பதில் ஆட்படையணி குறிப்பாக அமைந்துள்ளது. அடுக்குதல் என்பது ஒருவகைத் துன்பமும் பல வகைத்துன்பமும் தழுவும்.
|
|
கலைஞர் உரை:
|
|
துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதற்கென்று தனி முயற்சி செய்யாமலும்) மனங் கலங்காத இயல்புடையவனுக்கு அடுக்கடுக்காகப் பல துன்பங்கள் வந்தாலும், அத்துன்பங்கள் ஒன்றை யொன்று துன்பப்படுத்திக் கொள்ளுமே யல்லாமல் அவனை ஒன்றும் செய்யமாட்டா.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இடைவிடாமல் துன்பங்கள் மேன்மேல் வந்தாலும், தன் மனத்தில் உள்ள கோட்பாட்டினை விடாதவனிடம் வந்த துன்பங்கள் தாமே துன்பப்படும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அடுக்கடுக்காகத் துன்பங்கள் வந்துற்ற போதும் அவைகண்டு கலங்காத ஒருவனுக்கு வந்துற்ற துன்பங்களே துன்பப்பட்டு விலகி விடும்.
|
|
Translation
|
|
When griefs press on, but fail to crush the patient heart,
Then griefs defeated, put to grief, depart.
|
|
Explanation
|
|
The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose).
|
|
Transliteration
|
|
Atukki Varinum Azhivilaan Utra
Itukkan Itukkat Patum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|