|
செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அற்றேம் என்று அல்லற்படுபவோ - வறுமைக்காலத்து யாம் வறியமாயினேம் என்று மனத்தால் துயருழப்பாரோ; பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர் - செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை யறியாதார்? (பெற்றவழி இவறாமை நோக்கி அற்றவழியும் அப்பகுதி விடாது ஆகலின், அல்லற்பாடு இல்லையாயிற்று, இதனான் பொருளின்மையான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார், அதனைப் பெற்றோமென்று போற்றி வைத்தலை நன்றென்று தெளியாதவர். இது பொருட்கேட்டினால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பெற்றேம் என்று ஒம்புதல் தேற்றாதவர் - செல்வக் காலத்தில் யாம் இது பெற்றேமென்று மகிழ்ந்து கையழுத்தங் கொண்டு அதைக் காத்துக் கொள்ளுதலை அறியாதார்; அற்றேம் என்று அல்லல் படுபவோ - வறுமைக் காலத்தில் யாம் செல்வத்தை யிழந்தேமென்று துயரப்படுவரோ ? படார். "அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும்" ( நாலடி. 2) இவ்வுலகத்தில், இன்பமுந் துன்பமும் ஒப்பக் கொள்பவர் செல்வக் காலத்தில் மகிழ்ந்து அதை இறுகப் பற்றாமையால் , வறுமைக்காலத்தில் வருந்துவதும் செல்வமின்மையை உணர்வதும் இல்லை யென்றார். 'தேற்றாதவர்' தன்வினைப்பொருளில் வந்த பிறவினைச்சொல். தேற்றுதல் தெளிந்தறிதல்.
|
|
கலைஞர் உரை:
|
|
இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதுதான் இடுக்கணழியாமை என்பது. அப்படிப் பட்டவர்கள்) வெற்றி அடைந்துவிட்டோம் என்று அகந்தைகொள்ள மாட்டார்கள்; தோல்வி வந்துவிட்டாலும் துன்பப்படமாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
செல்வம் பெற்றிருந்த காலத்தில் உலோபி யாக இருப்பதை அறியாதவர்கள் வறுமையுற்ற காலத்தில் மனத்தினாலே துன்பப்படுவார்களோ? படமாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பெருஞ்செல்வம் பெற்றபோது பெற்றோம் என்றுமகிழ்ந்ததைக் காத்திடாதவர், செல்வம் இழந்திடும்போது இழந்தோமே என்று ஏங்கி அல்லல்படுவது ஏன்?
|
|
Translation
|
|
Who boasted not of wealth, nor gave it all their heart,
Will not bemoan the loss, when prosperous days depart.
|
|
Explanation
|
|
Will those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth.
|
|
Transliteration
|
|
Atremendru Allar Patupavo Petremendru
Ompudhal Thetraa Thavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|