|
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி
செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வையகம் எல்லாம் இறை காக்கும் - வையகத்தை எல்லாம் அரசன் காக்கும், அவனை முறை காக்கும் - அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும், முட்டாச் செயின் - அதனை முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின். (முட்டாமல் செலுத்தியவாறு: மகனை முறைசெய்தான் கண்ணும்(சிலப் 20:53-55 ) தன் கை குறைத்தான் கண்ணும் (சிலப்,23: 42-53)காண்க. 'முட்டாது' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. இவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்; அவன் அதனைக் கோடச் செய்யானாயின்.
இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வையகம் எல்லாம் இறை காக்கும் - உலகம் முழுவதையும் அரசன் காப்பான் ; முட்டாச் செயின் அவனை முறைகாக்கும் - முட்டுப்பாடு நேர்ந்த விடத்தும் முட்டில்லாது ஆட்சி செய்வானாயின், அவனை அவன் செங்கோலே காக்கும்.
முட்டில்லாமற் செய்தல் மனு முறைச் சோழன் தன்மகனை முறை செய்ததும், கொற்கைப் பாண்டியன் தன்கை குறைத்ததும் , போல்வதாம் . இனி, சிக்கலான வழக்குக்களைத் தீர்க்கும் வழியை இறைவனிடம் மன்றாடிக் கேட்டறிந்ததும் , முட்டாது செய்தலின் பாற்படும் . 'வையகம்' முதலாகுபெயர் . 'முட்டா' ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.
|
|
கலைஞர் உரை:
|
|
நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே
காப்பாற்றும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படிப்பட்ட மன்னவனைக் காப்பது அவனுடைய செங்கோல் அறமே) நாட்டிலுள்ள மக்களையெல்லாம் காப்பவன் மன்னவன். தர்மங்களுக்கு முட்டில்லாமல் அரசாட்சி செய்வதால் அந்த மன்னவனைக் காப்பது அவனுடைய செங்கோல் முறையே.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
வையகத்தையெல்லாம் அரசன் காப்பாற்றுவான்; அந்த அரசனை அவனுடைய செங்கோல் காப்பாற்றும்; அதனை அவன் முட்டாமல் செலுத்துவானானால் என்பதாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உலகத்தாரை (நாட்டு மக்களை) மன்னவர் காத்திட மன்னவரை நெறிபிறழாத ஆட்சி முறையே காக்கும்.
|
|
Translation
|
|
The king all the whole realm of earth protects;
And justice guards the king who right respects.
|
|
Explanation
|
|
The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.
|
|
Transliteration
|
|
Iraikaakkum Vaiyakam Ellaam Avanai
Muraikaakkum Muttaach Cheyin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|