|
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வினைக்கு உரிமை நாடிய பின்றை - ஒருவனை அரசன் தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து துணிந்தால், அவனை அதற்கு உரியனாகச் செயல் பின் அவனை அதற்குரியனாமாறு உயரச்செய்க. (உயரச்செய்தலாவது : அதனைத் தானேசெய்து முடிக்கும் ஆற்றலுடையனாக்குதல். அது செய்யாக்காலும் கெடும் என்பது கருத்து.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
இவ்வினைக்கு இவன் உரியவனென்று ஆராய்ந்த பின்பு, அவனை அவ்வினை செய்தற்கு உரியவனாகப் பண்ணுக.
இஃது ஒழிந்த காரியங்களின் வினை செய்வாரை ஆக்குமது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வினைக்கு உரிமை நாடிய பின்றை - அரசன் ஒருவனை ஒருவினை செய்தற்குரியவனாக ஆராய்ந்து துணிந்தபின் ; அவனை அதற்கு உரியன் ஆகச் செயல் - அவனை அவ்வினைக்கு முழுவுரிமையும் உடையவனாகச் செய்க.
'வினைக்குரிமை நாடிய பின்றை' என்றது வினைவகையான் வேறாகு மாந்தனன்மை யறிந்தபின் என்பதாம் . அதற்குரியனாகச் செயல் என்றது அரசன் அதில் தலையிடாதிருத்தலை . தலைசிறந்த ஆற்றலும் தன்மானமுமுள்ள வினைத்தலைவரின் வினையில் தலையிடுவது . தெளிந்தான்கண் ஐயுறவு போல் தீங்கு விளைக்கு மாதலின் , அது தகாதென்றார் . அரசன் ஒருவனது வினையை மறைவாகக் கவனித்து வருவதுவேறு ; அதில் வெளிப்படையாகத் தலையிடுவது வேறு . ஒரு தகுந்த வினைத்தலைவனது வினையில் அரசன் தலையிடாது முழுப்பொறுப்பையும் அவனிடம் விட்டு விட்டால் , அவன் மகிழ்ச்சியும் பெருமையும் ஊக்கமுங் கொண்டு அதை முழுவெற்றியாகச்செய்து முடிப்பான் என்பது கருத்து.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த
பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
காரியத்தைச் செய்யத் தகுதி உள்ளவன் என்று அறிந்த பின் அந்தக் காரியத்துக்கு அவனையே பொறுப்பாளியாக்கிவிட வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவனை ஆராய்ந்தறிந்து தனது தொழி லுக்கு உரியவனாகத் துணிந்த பிறகு அவனை அத்தொழிலுக்கு உரியவனாக உயரச் செய்தல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
செயற்குரியவனாக ஒருவனை ஆய்ந்து தேர்ந்த பின்னர் அவனை அதற்கு பொறுப்பாளனாக நியமித்தல் வேண்டும்.
|
|
Translation
|
|
As each man's special aptitude is known,
Bid each man make that special work his own.
|
|
Explanation
|
|
Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.
|
|
Transliteration
|
|
Vinaik Kurimai Naatiya Pindrai Avanai
Adharkuriya Naakach Cheyal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|