|
மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வினைக்கண் வினை உடையான் கேண்மை - எப்பொழுதும் தன் வினையின்கண்ணே முயறலை உடையான் அவ்வுரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை, வேறாக நினைப்பானைத் திரு நீங்கும் - அது பொறாதார் சொற்கேட்டு அரசன் மாறுபடக் கருதுமாயின், திருமகள் அவனை விட்டு நீங்கும். (கேளாய் ஒழுகுகின்ற தன்மையாவது: தான் பிறனாய் நில்லாது கேளிர்செய்தொழுகும் அவனை அவமதிப்பாகக் கொண்டு செறக்கருதுமாயின், பின் ஒருவரும்உட்பட்டு முயல்வார் இல்லையாம் . ஆகவே, தன் செல்வம்கெடும் என்பது கருத்து. இந்நான்கு பாட்டானும் ஆடற்குரியானைஆளும் திறம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
வினையிடத்து வினை செய்ய வல்லவனது நட்பை வேறுபாடாக நினைக்குமவனைத் திருமகள் நீங்குவள்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வினைக்கண் வினை உடையான் கேண்மை - தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வினையை முழுநேரமும் முழுமுயற்சியுடன் செய்து வருபவன் அவ்வுரிமை பற்றி அரசனொடு உறவுபோல் ஒழுகுவதை ; வேறாக நினைப்பானைத் திரு நீங்கும் - பொறாமைக்காரர் கோட்சொல்லைக்கேட்டு அரசன் வேறுபடக் கருதுவானாயின் , திருமகள் அவனைவிட்டு நீங்குவாள்.
உறவுபோல் ஒழுகுதலாவது அரசன் குடும்பவினைகளிற் கலந்து கொள்ளுதல் . அதை மதிப்புக் கேடாகக் கொண்டு அரசன் அவனைத் தண்டிக்கக் கருதுவானாயின் , அவன்போல் முழுப்பொறுப்பேற்று உண்மையாக வுழைப்பவர் வேறொருவரு மின்மையால், அரசன் செல்வங்கெடு மென்பதாம் . "திரு" ஆகுபெயர்.
|
|
கலைஞர் உரை:
|
|
எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின்
உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படிப் பொறுப்பை ஒப்படைத்த பின் இடையிடையே குறுக்கிட்டு ஆலோசனையோ அதிகாரமோ செலுத்தக்கூடாது. ஏனெனில்) வேலை நடந்து கொண்டிருக்கும்போது அந்த வேலைக்குப் பொறுப்பாளியாக அதைச் செய்துகொண்டிருக்கிற வனுடைய உறவு கெட்டுப் போகும்படி குறுக்கிடுகிற எசமான னுடைய சிறப்புக்கள் நீங்கிவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
எப்போதும் தொழிலினிடத்தில் முயற்சியாய் இருப்பவன் உரிமையால் தன்னிடம் சுற்றமாகப் பழகுகின்ற வனை அதற்குப் பொறாதவர்கள் சொன்னதைக் கேட்டு, மாறுபட நினைக்கும் தலைவனைவிட்டுத் திருமகள் நீங்குவாள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தான் மேற்கொண்ட செயலைத் திறம்படச் செய்து முடிக்கும் ஒருவன் பெருமையைப் பாராட்டாமல் வேறுபட்டு நினைப்பாரை விட்டுச் செல்வம் நீங்கும்.
|
|
Translation
|
|
Fortune deserts the king who ill can bear,
Informal friendly ways of men his tolls who share.
|
|
Explanation
|
|
Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.
|
|
Transliteration
|
|
Vinaikkan Vinaiyutaiyaan Kenmaive Raaka
Ninaippaanai Neengum Thiru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|