|
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
செய்வானை நாடி - முதற் கண்ணே செய்வானது இலக்கணத்தை ஆராய்ந்து, வினை நாடி - பின் செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து, காலத்தொடு எய்த உணர்ந்து செயல் - பின் அவனையும் அதனையும் காலத்தோடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க. (செய்வானது இலக்கணமும் வினையினது இயல்பும் மேலே கூறப்பட்டன. காலத்தொடு எய்த உணர்தலாவது, இக்காலத்து இவ்விலக்கணமுடையான் செய்யின் இவ்வியல்பிற்றாய வினை முடியும் என்று கூட்டி உணர்தல்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
வினை செய்வானையும் ஆராய்ந்து அவ்வினையினது இயல்பையும் ஆராய்ந்து அதுமுடியுங் காலத்தோடே பொருந்த அறிந்து, பின்பு அவ்வினை அவன் செய்வானாக அமைக்க வேண்டும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
செய்வானை நாடி - செய்வானது தன்மையை முதற்கண் ஆராய்ந்து ; வினைநாடி - பின்பு அவனாற் செய்யப்படும் செயலின் தன்மையை ஆராய்ந்து ; காலத்தோடு எய்த உணர்ந்து - அதன்பின் அவன் தன்மையும் அவன் செயலின் தன்மையும் காலத்தொடு பொருந்துமா றறிந்து ; செயல் - அவை பொருந்து மாயின் அவனை அவ்வினையின்கண் அரசன் ஆளுதலைச் செய்க.
செய்வானது இலக்கணம் இவ்வதிகாரத்தின் முதல் முக்குறள்களிலும், வினையின் இயல்பு இதற்கு முந்திய குறளிலும், கூறப்பட்டன . காலத்தோடெய்தவுணர்த லாவது , இத்தன்மையன் இவ்வினையை இக்காலத்து இவ்வகையிற் செய்யின் இவ்வாறு முடியும் என்று கூட்டி நோக்கி உய்த்துணர்தல்.
|
|
கலைஞர் உரை:
|
|
செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும்
ஆராய்ந்து, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்த வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால்) காரியத்தைச் செய்ய ஆளைத் தேடிக்கொண்டு அந்த ஆள் இந்தக் காரியத்துக்குத் தகுந்தவனா என்பதையும் தெரிந்து செய்யவேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
முதலில் தொழில் செய்பவனுடைய இலக் கணத்தினை ஆராய்ந்து, செய்யப்படும் தொழிலினுடைய இயல்பினை ஆய்ந்து, பிறகு தாமே தக்க காலத்தினைத் தெரிந்து அவனை அத்தொழிலினிடத்தில் ஆளக்கடவன்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
செயல்திறன்மிக்க ஒருவனைத் தேர்ந்து செயல்முறை களையும் ஆய்ந்து, உரிய காலத்தையும் கருதி பணிகளை மேற்கொள்ளல் வேண்டும்.
|
|
Translation
|
|
Let king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?'
Of hour befitting both assured, let every work proceed.
|
|
Explanation
|
|
Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it.
|
|
Transliteration
|
|
Seyvaanai Naati Vinainaatik Kaalaththotu
Eydha Unarndhu Seyal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|