|
(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் - செய்யும் உபாயங்களை அறிந்து செயலானும் இடையூறுகளானும் வரும் துன்பங்களைப் பொறுத்து முடிவுசெய்ய வல்லானையல்லது, வினைதான் சிறந்தான் என்று ஏவற்பாற்றன்று - வினைதான் இவன் நம்மாட்டு அன்புடையன் என்று பிறனொருவனை ஏவும் இயல்புடைத்தன்று. ('செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம். அறிவு ஆற்றல்களான் அல்லது அன்பான் முடியாது என இதனான் வினையினது இயல்பு கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
செய்யும் உபாயங்களை யறிந்து, செயலானும் இடையூறுகளானும் வருந் துன்பங்களைப் பொறுத்து முடிவு செய்யவல்லானையல்லது வினைதான் இவன் நம்மாட்டன்புடையானென்று பிறனொருவனையேவும் இயல்புடைத்தன்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வினைதான் - எவ்வினையுந்தான் ; அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் - செய்யும் வழிகளை யறிந்து செயலாலும் இடையூறுகளாலும் வருந்துன்பங்களைப் பொறுத்துச் செய்து முடிக்க வல்லானையல்லது; சிறந்தான் என்று ஏவல் பாற்று அன்று - இவன் நம் மிடத்துச் சிறந்த அன்புடையவனென்று வேறு எவனையும் ஏவத்தக்கதன்று.
'செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம் . கில் ஆற்றலுணர்த்தும் இடைநிலை . பாலது - பாற்று ( பால் + து ) . அறிவாற்றல் பொறையூக்கங்களாலன்றி அன்பினால் மட்டும் எவ்வினையும் முடியா தென்பது கருத்து.
|
|
கலைஞர் உரை:
|
|
ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல்
வேறோருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஆகையினால்) குறிப்பிட்ட வேலையை அறிந்தவ னாகவும் அதைச் சமாளித்து முடிக்கக்கூடியவனாகவும் இருந்தா லன்றி ஒருவனை அவனுக்குள்ள வேறு சிறப்புக்களைக் கருதி வேலை செய்ய ஏவக்கூடாது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தொழியினைத் தக்கபடி ஆராய்ந்தறிந்து முடிவு செய்ய வல்லவனையல்லாமல், 'இனி நம்மிடத்தில் அன்பு உள்ளவன்' என்ற காரணத்தினால் தொழிலின்மேல் ஒருவனை அமர்த்தும் தன்மை கூடாது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒரு செயலை நன்கு அறிந்த திறம்படச் செய்து முடிக்கும் அற்றல் அல்லாதவரிடம், சிறந்தவன் எனக்கருதி பணியை ஒப்படைத்தல் கூடாது.
|
|
Translation
|
|
No specious fav'rite should the king's commission bear,
But he that knows, and work performs with patient care.
|
|
Explanation
|
|
(A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment.
|
|
Transliteration
|
|
Arindhaatrich Cheykirpaarku Allaal Vinaidhaan
Sirandhaanendru Evarpaar Randru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|