|
கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் - கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும், அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார். (ஒண்மை: அறிவுடைமை, அது நன்றாகாது, ஆயிற்றாயினும் ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின், நிலைபெற்ற நூல் அறிவுடையார் அதனை மதியார் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும் அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார்.
ஒண்மை யெனினும் அறிவெனினும் அமையும். இது கல்லாதார் ஒள்ளியாராயினும் மதிக்கப்படாரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்-கல்லாதவனுக்கு ஒரோவழி தற்செயலாகத்தோன்றும் உயரிய கருத்து மிகச் சிறந்ததாயினும்; அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அவனைப் பாராட்டுமளவில் அதை உயர்வாகக் கொள்ளார்.
உம்மை அருமை குறித்து நின்றது. ஒட்பம்=அறிவொளி. ஒள்-ஒட்பு-ஒட்பம். ஒள்-ஒளி, ஒரோவழி=ஏதேனுமொரு சமையம், மிக அருகி. கல்லாதவனுக்குத் தோன்றும் ஒண்கருத்து. ஏ ர ல் (நத்தை) மணலில் ஊருங்கால் நேருங் கீறலில் தற்செயலாக அமையும் ஓர் எழுத்துவடிவம் போன்றதாகலின், அதை அவனது உண்மையறிவின் விளைவாகக் கருதார் என்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட,
அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள
மாட்டார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பிறர் சொல்லித் தந்ததை மனப்பாடம் செய்துகொண்டு) சொந்தக் கல்வி யில்லாதவன் மிக நல்ல கருத்துக்களைப் பேசி விட்டாலும், அறிவுடையவர்கள் அவனைக் கற்றவனாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
கல்லாதவனுடைய அறிவுடைமை ஒரு நேரத்தில் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையவர்கள் அதனை அறிவாகக் கொள்ள மாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கல்வியறிவு பெறாத ஒருவன் இயற்கையிலேயே மதிநுட்பம் உடையவனாக இருந்தாலும் கூட அறிஞர் பெருமக்கள் அதனை ஏற்றுக் கொள்வதில்லை
|
|
Translation
|
|
From blockheads' lips, when words of wisdom glibly flow,
The wise receive them not, though good they seem to show.
|
|
Explanation
|
|
Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.
|
|
Transliteration
|
|
Kallaadhaan Otpam Kazhiyanan Raayinum
Kollaar Arivutai Yaar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|