|
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
செல்வம் செயற்கு - செல்வத்தை ஆக்குதற்கு, நல்லவைஎல்லாம் தீயவாம் - நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவும் நல்லவாம்-அதுவே யன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும், (ஊழ் வயத்தான். 'நல்லவை' 'தீயவை' யென்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலியவற்றை. 'ஊழா' னென்பது அதிகாரத்தாற் பெற்றாம். அழிக்குமூழுற்றவழிக் கால முதலிய நல்லவாயினும் அழியும்; அழிக்குமூ ழுற்றவழி அவை தீயவாயினும் ஆகுமென்ப தாயிற்று. ஆகவே, கால முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்குமென்பது பெற்றாம்.
|
|
மணக்குடவர் உரை:
|
|
செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்குமுன்பு தீதாயிருந்தனவெல்லாம் நன்றாம்: அச்செல்வத்தை யில்லை யாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தனவெல்லாம் தீதாம்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
செல்வம் செயற்கு - செல்வத்தைத்தேடுதற்கு; நல்லவை எல்லாம் தீய ஆம் - தீயூழுற்ற விடத்து நல்ல நிலைமைகளெல்லாம் தீயனவாகிப் பயன்படாது போம்; தீயவும் நல்ல ஆம் - நல்லூழுற்ற விடத்துத் தீயநிலைமைகளும் நல்லன வாகிப் பயன்படும்.
நல்லவும் தீயவுமான நிலைமைகள் காலமும் இடமும் கருவியும் முயற்சியும் துணையாட்களும் பற்றியனவாம். நல்லூழ் தீயூழ் என்பன அதிகாரத்தால் வந்தன. பொருளீட்டும் முயற்சிக்குரிய துணைக்கரணங்களும் ஊழால் வேறுபடு மென்பது இங்குக் கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய்
முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை
நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
செல்வம் சம்பாதிப்பதற்குக் கல்வியறிவுடன் நல்ல முறையில் செய்யப்படுகிற முயற்சிகள் கெட்டுப் போகின்றன. அறிவில்லாமலும் தீய வழிகளில் செய்யப்படுகிற முயற்சிகள் நல்ல பலனைத் தருகின்றன.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
செல்வத்தை ஆக்குவதற்கு நல்லவையெல்லாம் தீயனவாய் அழிக்கும். அதுவேயன்றித் தீயவையெல்லாம் நல்லனவாய் ஆக்கும். இவை ஊழினால் நடப்பதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவர் பொருள் ஈட்டும் முயற்சியில் நல்லவை தீயனவாகவும் தீயவை நல்லனவாகவும் ஊழ்வினைப் பயனாலேயே மாற்றம் பெறுகின்றன.
|
|
Translation
|
|
All things that good appear will oft have ill success;
All evil things prove good for gain of happiness.
|
|
Explanation
|
|
Let In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate).
|
|
Transliteration
|
|
Nallavai Ellaaan Theeyavaam Theeyavum
Nallavaam Selvam Seyarku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|