|
தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
புகழ்பட வாழாதார்- தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார்; தம் நோவார் அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி, 'இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது' என்று தம்மை நோவாதே தம்மை இகழ்வாரை நோவது எவன்-தம்மை இகழ்வாரை நோவது என் கருதி? (புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின், இகழ்வாரை என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
புகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது தம்மை யிகழ்வாரை நோகின்றது யாதினுக்கு?
இது புகழ்பட வாழமாட்டாதார் இகழப்படுவரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
புகழ்பட வாழாதார்-தமக்குப் புகழுண்டாக வாழாதவர்; தம் நோவார்-அது பற்றிப் பிறர் தம்மை யிகழ்ந்த விடத்து அதற்குக் கரணியமான தம்மையே நொந்து கொள்ளாது; தம்மை இகழ்வாரை நோவது எவன் - தம்மை யிகழ்ந்தவரை நோவது எதற்கு?
புகழ்பட வாழாமையின் தீய விளைவு இங்குக் கூறப் பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள் அதற்காகத் தம்மை
நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து
பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படித்திறமையும் புகழுமில்லாதவர் ஒரு காரியத்துக்கு நானென்று முன்வந்து அக்காரியம் கெட்டுப் போய் அதற்காக அவரைப் பிறர் இகழ்ந்தால்) பிறர் புகழும்படி நடந்து கொள்ளத் தெரியாதவர் தம்மைத் தாமே நொந்துகொள்ள வேண்டுமே யன்றித் தம்மை இகழ்வாரை நொந்து கொள்வதில் என்ன பயன்?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழாத வர்கள் அதுபற்றிப் பிறர் இகழும்போது, அவ்வாறு இகழ்பவர்கள் மீது வருத்தப்படுதல் ஏனோ?
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நற்பணிகள் செய்து வாழ்நாளில் புகழோடு வாழாத தன்மையர் தன் நிலையை உணர்ந்திடாமல் தம்மை இகழ்வாரை நோவதால் என்ன பயன்?
|
|
Translation
|
|
If you your days will spend devoid of goodly fame,
When men despise, why blame them? You've yourself to blame.
|
|
Explanation
|
|
Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.
|
|
Transliteration
|
|
Pukazhpata Vaazhaadhaar Thannovaar Thammai
Ikazhvaarai Novadhu Evan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|