Thirukural

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீரசெய்யாது அமைகலா வாறு.

ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது, செயும் நீர செய்யாது அமைகலா ஆறு - தவிராது செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம். (தான் நுகர்வன நுகரப் பெறாமை அன்று என்பதாம். இவ்விரண்டு பாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நயனுடையான் நல்கூர்ந்தா னாகின்றது செய்ய வேண்டுவன செய்யாதே யமைய மாட்டாத இயல்பாம். இது செல்வங் குறைபடினுஞ் செய்வரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவாளன் வறியவனாதலாவது; செயும்நீர செய்யாது அமைகலா வாறு - தவிராது செய்யும் தன்மையவான வேளாண்மைச் செயல்களைச் செய்யவியலாது அமைதியற்றிருக்கும் நிலைமையே. அமைதியற்றிருக்கும் நிலைமையாவது வருந்துதல். ஒப்புரவுசெய்யவியலாவாறு செல்வம் அற்றவிடத்து, பிறரை நுகர்வியாமைபற்றியேயன்றித் தான் நுகராமை பற்றி வருந்துவதில்லை யென்பதாம்.
கலைஞர் உரை:
பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.
சாலமன் பாப்பையா உரை:
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
ஒப்புரவை அறிந்த இரக்கமுள்ளவன் தன்னை ஏழையென்று எண்ணுவது பிறருக்கு உபகாரம் செய்ய முடியாத சமயத்தில்தான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒப்புரவு செய்பவனுக்கு வறுமை என்பது யாதென்றால், தவறாமல் செய்கின்ற ஒப்புரவினைச் செய்ய முடியாமல் வருந்தி இருக்கும் நிலைமையே ஆகும்.
தமிழ்க்குழவி உரை:
ஒப்புரவறிந்து வாழும் உயர்பண்பாளன் பிறக்கு உதவ முடியாத சூழலில் வருந்துவதே அவனுக்கு வறுமை என அமைகிறது.
Translation
The kindly-hearted man is poor in this alone, When power of doing deeds of goodness he finds none.
Explanation
The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same.
Transliteration
Nayanutaiyaan Nalkoorndhaa Naadhal Seyumneera Seyyaadhu Amaikalaa Vaaru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 219