|
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தீவினை என்னும் செருக்கு - தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் - முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் - அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர். ('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்து அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகிய களிப்பை.
இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தீவினை என்னும் செருக்கு-தீவினை என்று சொல்லப்படும் இறுமாப்பிற்கு; தீவினையார் அஞ்சார். தீவினை செய்து பழகிய தீயோர் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்-ஆயின் அதைச் செய்தறியாத சீரியோர் அஞ்சுவர்.
தீவினைக்குக் கரணியமான இறுமாப்பு தீவினை யென்னும் கருமியமாகச் சார்த்திக் கூறப்பட்டது. அஞ்சாமை மனச்சான்றின் மழுக்கத்தாலும் அச்சம் அதன் கூர்மையாலும் ஏற்படுவனவாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி
ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பிறருக்குத் தீங்கு செய்வதனால், தமக்கு வரக்கூடிய பாவம் என்னும் ஒரு வல்லமையுள்ள சத்திக்கு, தீங்கு செய்யும் இயல்புள்ளவர்கள் அஞ்சுவதில்லை; ஆனால் நல்லவர்கள் அதற்கு அஞ்ச வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தீய செயல் என்னும் செருக்குடைய அறியாமைக்கு தீவினையாளராகிய தீச்செயல் நெஞ்சங்கொண்டவர்கள் அஞ்சமாட்டார்கள். சீரிய சிறப்புடையவர்கள் அஞ்சப் படுவார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அகங்காரத்துடன் தீய செயல்களைச் செய்வதற்கு தீவினைகளிலே பழகிப் போனவர்கள் அஞ்சுவதில்லை. நல்லவர்கள் அஞ்சுவர்.
|
|
Translation
|
|
With sinful act men cease to feel the dread of ill within,
The excellent will dread the wanton pride of cherished sin.
|
|
Explanation
|
|
Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.
|
|
Transliteration
|
|
Theevinaiyaar Anjaar Vizhumiyaar Anjuvar
Theevinai Ennum Serukku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|