|
மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார், 'மருள் தீர்ந்த' மாசுஅறு காட்சியவர் - மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார். "('தூய அறிவு' மெய்யறிவு. 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் காட்சியவர் என்னும் குறிப்புப்பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல சொல்லாமையின் குணம் கூறப்பட்ட.து)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்; மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார்,
இது தெளிவுடையார் கூறாரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மருள் தீரந்த மாசு அறு காட்சியவர் - மயக்கத்தினின்று நீங்கிய குற்ற மற்ற அறிவுடையார்; பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் -பயனில்லாத சொற்களை மறந்துஞ் சொல்லார்.
மயக்கம் ஐயமுந் திரிபும். குற்ற மற்ற அறிவு மெய்யறிவு அல்லது தூய அறிவு.
|
|
கலைஞர் உரை:
|
|
மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற
சொற்களைச் சொல்ல மாட்டார்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அறிவொழுக்கத்தோடு பிறவிப் பயனையும் அறிந்து அதன்மேலும் ஆசாபாச மயக்கங்களை ஒழித்தவர்கள்) உலக ஆசைகளின்மயக்கங்களை ஒழித்துவிட்ட மெய்யறிவுடையவர்கள் எப்போதும் எங்கே பேசினாலும் பயனில்லாத வார்த்தைகளை மறந்தும் பேசிவிட மாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அஞ்ஞானத்திலிருந்து நீங்கிய தூய அறிவினையுடைய பெரியோர்கள், பயனில்லாத சொற்களை மறந்தும் சொல்லமாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தெளிவுடன் கூடிய குற்றமற்ற சான்றோர்கள் என்றும் பொருளற்ற வெற்றுச் சொற்களைப் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள்.
|
|
Translation
|
|
The men of vision pure, from wildering folly free,
Not e'en in thoughtless hour, speak words of vanity.
|
|
Explanation
|
|
Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not.
|
|
Transliteration
|
|
Poruldheerndha Pochchaandhunj Chollaar Maruldheerndha
Maasaru Kaatchi Yavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|